ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்போம்..! அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி..!!
78வது சுதந்திர தினவிழா நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.. காலை கொடியேற்றம் முடிந்ததும் மாலை ஆளுநர் மாளிகையில் அமைச்சர்களுக்கு தேநீர் விருந்து அளிப்பது வழக்கம் அந்த வகையில் இன்று மாலை ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து வைக்கப்படும் என ஆளுநர் அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்..
ஆனால் இந்த தேநீர் விருந்தில் பங்கேற்காமல் புறக்கணிக்கப்போவதாக திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக புறக்கணிக்கப்போவதாக அறிவிப்பு வெளியானது அதற்கான காரணம் குறித்தும் காங்கிரஸ் கமிட்டி செல்வப்பெருந்தகை கூறியிருந்தார்..
அதாவது ஆளுநர் தமிழ்நாட்டின் நலனுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் எதிராகவே ஆளுநரின் செயல்பாடுகள் இருப்பதாகத் தெரிவித்து தேநீர் விருந்தை காங்கிரஸ் புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, திமுக கூட்டணிக் கட்சிகளான மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட்,விசிக உள்ளிட்ட கட்சிகளும் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து தேநீர் விருந்தை புறக்கணிக்க போவதாக தெரிவித்திருந்தனர்..
இந்நிலையில் திடீர் திருப்பமாக முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..