கல்வி எனும் அறிவாயுதம் துணை ஆகட்டும்..!! ஸ்டாலின் வாழ்த்து..!! நெகிழ்ச்சியில் மாணவர்கள் வாழ்த்து..!!
தமிழகம் முழுதுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.., கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்து உள்ளது..,
அதன்படி தேர்ச்சி சதவீதமானது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. தமிழில் 8 மாணவர்கள் மட்டுமே நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். ஆனால் கணிதம் பாடப்பிரிவில் 20 ஆயிரத்து 691 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்களில் 96.85 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். ஆங்கிலத்தில் 91.15 சதவீதம், கணிதத்தில் 96.78 சதவீதம், அறிவியலில் 96.72 சதவீதம், சமூக அறிவியல் 9574 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் இணைய தளப்பக்கத்தில் மாணவர்களுக்கு வாழ்த்துகூறி கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். “மேல்நிலைக் கல்விக்கு நுழைவு வாயிலாய் அமையும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்து என பதிவிட்டுள்ளார்..
மேலும் மாணவச் செல்வங்களே, உங்களது எதிர்காலத்தைத் திட்டமிட்டு வடிவமைத்துக் கொள்வதற்கான அடித்தளத்தை வலிமையாக அமைத்துக் கொள்ளுங்கள்! குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் அடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்..,
மேல்நிலைக் கல்வி – தொழிற்கல்வி எனப் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. உங்களது பாதைக்கு வழிகாட்ட #நான்_முதல்வன் உள்ளிட்ட நமது அரசின் திட்டங்கள் உள்ளன. கல்வி எனும் அறிவாயுதம் உங்களுக்கு என்றும் துணையாக அமையட்டும்!” எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் தனது எக்ஸ் தளத்தில், “10-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் வெற்றி பெற்று மேல்நிலை வகுப்புகளை நோக்கி நம்பிக்கையோடு நகரும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பான வாழ்த்துகள்.
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மன உறுதியோடும், தன்னம்பிக்கையோடும் உடனடித் தேர்வுகளை தவறாமல் எழுத வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
முதல்வர் ஸ்டாலினின் #நான்_முதல்வன் போன்ற வழிகாட்டித் திட்டங்களை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் விரும்பும் துறைகள் ஏராளமான வாய்ப்புகளுடன் உங்களுக்காக காத்திருக்கிறது. தேர்வு எழுதிய மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் மீண்டுமொருமுறை மனமார்ந்த வாழ்த்துகள்” என இவ்வாறே முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..