மாணவர்களை சந்திக்கும் மாண்பிகு மாணவன்..!! சர்ச்சையை கிளப்பிய அந்த நபர்..!! பதிலடி கொடுத்த ரசிகர்கள்..!!
தற்போது GOAT படப்பிடிப்பில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் தளபதி விஜய் தற்போது மாணவர்களுக்காகவும்.., பெண்களுக்காகவும் ஒரு சூப்பர் அப்டேட் கொடுத்துள்ளார்.., இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் உற்சாகத்தில் உள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒவ்வொரு மாவட்டப்பள்ளியிலும் முதல் மூன்று இடத்தை பிடித்து வெற்றி பெற்ற மாணவர்களை அழைத்து சான்றிதழ்கள் வழங்கியும்.., சால்வை அணிவித்தும் கெளரவித்தார் தளபதி விஜய்..
அதன் பின் அவர் அரசியல் வருவதற்காக தான் இதனை செய்கிறார் என பல விமர்சனங்களும் எழுந்தது.., அத்தோடு அவரது லியோ படத்திற்கு ஏகப்பட்ட விமர்சனங்களும் எழுந்தது. படம் வெளியாகும் வரை தளபதி விஜய்க்கு ஏகப்பட்ட சிக்கல் என சொல்லலாம்.., அந்த அளவிற்கு சில அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பல நெருக்கடிகளை கொடுத்தது தளபதி ரசிகர்களிடையே கடுப்பை கிளப்பியது என சொல்லலாம்.
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என சொல்லும் விதமாக எத்தனை பேர் என்ன சிக்கல் கொடுத்தாலும்.., நான் செய்யும் நல்ல திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பேன் என தளபதி விஜய் தற்போது ஒரு சூப்பர் அப்டேட் கொடுத்துள்ளார்.
அதவாது கடந்த மே 6ம் தேதி பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வும்.., இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வும் வெளியாகியுள்ளது..
இந்நிலையில் இதுவரை 12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஓவ்வொரு மாவட்டத்திலும் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களை சந்தித்து சால்வை அணிவித்து சான்றிதழ்கள் வழங்க போவதாக.., தமிழக வெற்றிக் கழகத்தின் இணையதளம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்..
இந்த பதிவு வெளியான சில நொடிகளிலேயே ஒரு சிலர் இது சர்ச்சையை கிளப்பும் விதமாக இருப்பதாகவும்.., அவர் அரசியலில் இந்த காலத்து இளைஞர்களை தன் பக்கம் ஈர்ப்பதற்கான செயல் என்றும் பதிவிட்டுள்ளனர்.
இதற்கு தளபதி ரசிகர்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளனர்.., அதாவது உதவி செய்ய வேண்டும் என நினைப்பவன் அரசியல் வந்த பின்னும் செய்ய மாட்டான் அரசியல் வருவதற்காகவும் செய்ய மாட்டான்.., அடுத்தவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே செய்வான்..
இருக்கிறவன் முறையாக செய்தால் வாக்காளர்கள் ஏன் மற்றவர்களை தேர்ந்தெடுக்க போகிறார்கள் எனவும் பதிலடி கொடுத்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..