யாரவது 2000 ரூபாய் நோட்டு வச்சிருந்த மாத்திடுங்க..!! ஏனா..?
2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி கொள்வதற்கான காலக்கெடு நாளையுடன் முடிடைகிறது. நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெருவதாக கடந்த மே 19ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது.
பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30ம் தேதி வரை வங்கிகளில் செலுத்தி மாற்றிக் கொள்ளலாம் என அறிவித்திருந்தது.
இந்த அவகாசம் நாளையுடன் நிறைவடையும் நிலையில், 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படாது என ரிசர்வ் வங்கி அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது..
நாளையுடன் ரூபாய் நோட்டுகள் மாற்றுவதற்கான தேதி முடிவடைய இருப்பதால் பெட்ரோல் பங்குகள், திரையரங்குகள், அரசு பேருந்து மற்றும் ஆம்னி பேருந்துகள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் பொதுமக்களிடம் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளை வாங்குவதை ஏற்கனவே நிறுத்தியுள்ளனர்.
தற்போது வங்கிகளிலும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள இன்னும் ஒரே ஒரு நாள் மட்டுமே உள்ளது. ரிசர்வ் வங்கி தகவலின் படி கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி வரை புழக்கத்தில் இருக்கும் 93% 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.