“ரவுடிகளுக்கு புரியும் பாஷையில் பாடம்..” கமிஷனர் அருண் கேட்ட மன்னிப்பு..!!
ரவுடிகளுக்கு புரியும் பாஷையிலேயே பாடம் புகட்டப்படும் என சென்னை போலிஸ் கமிஷனர் அருண் மாநில மனித உரிமை கமிஷனில் மனு தாக்கல் செய்துள்ளார்..
கடந்த ஜூலை 8ம் தேதி சென்னையின் புதிய போலிஸ் கமிஷனராக அருண் நியமனம் செய்யப்பட்டார்.. அவர் பதிவேற்ற முதலிலேயே ரவுடிகளின் அட்டகாசத்தை முற்றிலுமாக ஒழிப்போம் என அவர் கூறினார். அதன் பின்னர் அவர் சில பிரபல ரவுடிகளின் லிஸ்ட் எடுத்து வார்ணிங் கொடுத்தார். அதன் பின்னர் பிரபல ரவுடிகள் சிலர் என்கவுண்டரில் சுடப்பட்டனர்..
சென்னையின் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். அந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ரவுடி திருவேங்கடம், என்கவுன்டரில் சுடப்பட்டார். அவரை தொடர்ந்து வட சென்னையின் முக்கிய ரவுடிகளான காக்கா தோப்பு பாலாஜி, சீசிங் ராஜா ஆகியோரும் என்கவுன்டரில் சுடப்பட்டனர்..
இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் வெளியட்டுள்ள பதிவு ரவுடிகளிடையே பீதி அடைய செய்துள்ளது.. இன்று அவர் அளித்திருந்த பேட்டியில், இனியும் சென்னையில் ரவுடிசம் ஒழியவில்லை என்றால் “ரவுடிகளுக்கு புரியும் பாஷையில் அவர்களுக்கு பாடம் புகட்டப்படும்..” என கூறியுள்ளார்.. அதனை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உதவி கமிஷனர் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள், மற்றும் ரவுடிகளுக்கு உறவினர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது..
சென்னை திருவொற்றிரை சார்ந்த பிரபல ரவுடியின் மனைவியிடம் “மீண்டும் உங்களது கணவர் கத்தியை எடுத்தால் ., கட்டபஞ்சாயத்து, உட்பட எந்த வழக்கில் சிக்கினாலும் என்கவுண்டரில் போட்ட தள்ளப்படுவார் இல்லை கை,கால்கள் உடைகப்படுவார் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது..
சென்னையில் ஆட்டம் காட்டும் மொத்த ரவுடிகளின் ஆட்டத்தை ஒழிக்க மாநில மனித உரிமை கமிஷனர் தானாக முன்வந்து, உதவி கமிஷனர் இளங்கோவன் மற்றும் அவருடன் சென்ற போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.., அந்த வழக்கு தொடர்பாக அக்டோபர் 14ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பபட்டது..
அதன்படி அக்டோபர் 14ம் தேதி நீதிபதி மணிக்குமார் முன், அருண் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் முன்பு ஆஜராகினார். மீண்டும் அந்த வழக்கானது நேற்று விசாரணை செய்யப்பட்டது.., மீண்டும் இந்த வழக்கானது அருண் சார்பில், மூத்த வழக்கறிஞர் வில்சன் முன்பு ஆஜர் செய்யப்பட்ட பின்னர் மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்துள்ளதாக. அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..