நடன கலைஞர்கள் காசு தராமல் இழுத்தடிக்கும் லியோ படக்குழு..!! உண்மையை உடைத்த FEFSI..!!
லியோ படம் எந்த அளவிற்கு திரையில் வருவதற்கு ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்ப்பில் இருகிறார்களோ.., அதே அளவிற்கு படம் பற்றிய தவறான விமர்சனமும் அதிகரித்து கொண்டே வருகிறது.. பேசப்பட்டு வரும் அனைத்து வதந்திகளுக்கும் படக்குழு பதில் அளித்து கொண்டே வருகிறது..
இந்நிலையில் கடந்த சில நாட்களாக லியோ படத்தின் “நான் ரெடி தான் வரவா” பாடலில் உடன் ஆடிய நடன கலைஞர்களுக்கு காசு தரவில்லை என்ற ஒரு வதந்தி வேகமாக பரவி வருகிறது..
இது முற்றிலும் தவறான செய்தியென தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (FEFSI) தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்..
நடன கலைஞர்கள் என ஒரு பாடலுக்கு பின் வரிசையில் நின்று ஆடுபவர்களை ரிச் பாய்ஸ், என சொல்லுவார்கள்.., அந்த வகையில் லியோ படத்தின் “நான் ரெடி தான்” பாடலுக்கு 600 பேர் நடனம் ஆடினர்..
சினிமாவில் ரிச் பாய்ஸ் ஆக வருபவர்களுக்கு 3வேளை உணவு அளித்து நாளொன்றுக்கு 1000 ரூபாய் என வழங்குவது வழக்கம்..
லியோ படத்திலும் அப்படி தான் ஜூன் மாதம் 6ம் தேதி சென்னை பனையூரில் உள்ள “ஆதி ஸ்ரீராம்” ஸ்டுடியோவில் நடைபெற்றது.., அதில் நடனம் ஆடியவர்களுக்கு 175௦ ரூபாய் வீதம் 6 நாட்களுக்கு 1௦,500 ரூபாய் என அவரவர் வங்கி கணக்கில் டெபாசிட் செய்துள்ளது படக்குழு இவர்களுக்கு ரிகர்சல் அளித்து ஒழுங்குப்படுத்தும் விதமாக சர்வீஸ் சார்ஜ் தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குநர்கள் சங்கத்திற்கு (TANTTNNIS) தனியாக வழங்கப்பட்டது…
ஆனால் தற்போது ஒரு சிலர் எங்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என தெரிவிப்பது பெரும் வதந்தி என தெரிவித்துள்ளது.. அதற்கான ஆதரங்களையும் படக்குழு வெளியிட்டுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..