சட்டப்பேரவை குட்கா விவகாரம்..! உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸ்..! நீதிமன்றம் உத்தரவு..!
அதிமுக ஆட்சி காலத்தில் சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு செல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், இன்றைய முதலமைச்சருமான “ஸ்டாலின்” திமுக எம்.எல்.ஏ-களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீசை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து கடந்த ஆட்சியில் மேல் முறையீடு செய்திருந்தனர்.
அந்த வழக்கில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்களின் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகினர். அதிமுகவின் 18 எம்.எல்.ஏ.க்கள் தமிழக அரசுக்கு எதிராக செயல்பட்டது, எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்தியது குறித்து சுட்டிக்காட்டி, இந்த உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் சட்டமன்ற பதவிக்காலம் முடிந்ததுமே.., சட்டமன்றமானது கலைந்து விடுகிறது. அப்போது நிலுவையில் உள்ள சில மசோதாக்கள், உரிமை மீறல் உள்ளிட்ட நடவடிக்கைகள் என அனைத்தும் காலாவதியாகி விடுகிறது. தற்போதைய சட்டமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க முடியாது எனவும், உள்நோக்கத்துடன் சிலர் உரிமை மீறல் நோட்டீஸ் அளிப்பதால், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என தெரிவித்திருந்தது.
அதன் பின் உரிமைக் குழு சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர், உரிமைக்குழு நோட்டீஸ் காலாவதி ஆவதில்லை. ஏனென்றால் உரிமைக்குழுவானது எந்த கட்சிக்கும் ஆதாரவானது கிடையாது. அது தனி அமைப்பு கொண்டுள்ளது., அதன் செயல்பாடுகளை யாரும் கேள்வி எழுப்ப முடியாது என அவர் கூறியிருந்தார்
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் இந்த வழக்கின் தீர்ப்பை ஜூலை 29ம் தேதி வரை ஒத்திவைத்திருந்தனர். ஜூலை 29ம் நடைபெற்ற வாதத்தில் அந்த வழக்கு ஜூலை 31ம் ஒத்திவைத்திருந்தனர்.
அதற்கான விவாதம் இருதரப்பினர் இடையில் இன்று தொடங்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் “உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்ப அனைத்து அதிகாரமும் உள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் விதிகளுக்கு எதிராக செயல்படுவதை அனுமதித்தால் அது எதிர்காலத்திற்கு தவறான முன் உதாரணமாக அமைந்து விடும் எனவே மக்களின் பிரதிநிகள் அடங்கிய சட்டமன்றத்தின் கண்ணியம் காக்கப்பட வேண்டும்.
இதற்கு முன் அனுப்பிய அந்த நோட்டீஸை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. சட்டமன்ற உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸ் மீது தொடர்ந்து விசாரணை நடத்தலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..