சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதி..! புழல் சிறைக்கு செல்லும் வழியில் நடந்தது என்ன..?
பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யுடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்திருந்தனர். பல்வேறு வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது வரை 10 வழக்குகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீலகிரி போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்து நேற்று முன்தினம் ஊட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருந்தனர்.. அந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி சவுக்கு சங்கரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கி இருந்தனர்.
அதன் பேரில் ஒருநாள் காவலில் எடுத்து விசாரணை செய்வதற்காக நேற்று மாலை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின் இன்று சென்னை புழல் சிறைக்கு காவலர்கள் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.. அப்போது வரும் வழியில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
அதன் பேரில் மதியம் 12.30 மணியளவில் சவுக்கு சங்கர் சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுளார். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய நெஞ்சுவலிக்கான காரணம் குறித்தும் தற்போதைய உடல்நலம் குறித்து மருத்துவர்கள் தற்போது வரை தெரிவிக்கவில்லை., அவருடைய பாதுகாப்பிற்காக மருத்துவமனையின் வெளியே பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..