சரவணா ஸ்டோர் அதிபர் லெஜண்ட் சரவணன் நடித்த ’தி லெஜண்ட்’ என்ற படம் கடந்த 2022 ஆம் ஆண்டு தியேட்டரில் ரிலீஸாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனம் பெற்றது. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இப்படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீனானது. வேல்ராஜ் ஒளிப்பதிவில் உருவான இந்த படத்தில் சரவணன் ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரெளட்டாலா நடித்திருந்தார். பெரிய நடிகர்களிடன் படங்களுக்கு இணையாக இப்படத்தை அண்ணாச்சி தயாரித்து நடித்து அதை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், லெஜண்ட் சரவணாவின் அடுத்த படம் அப்டேட் வெளியாகும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இன்று குழந்தைகளுடன் சுதந்திரதினம் கொண்டாடிய லெஜண்ட் சரவணன், ஒரு குழந்தை அவரிடம் அடுத்த பட அப்டேட் எப்போது என்று கேள்வி எழுப்பியது. இதற்குப் பதிலளித்த அவர், ‘’லெஜண்ட் படத்திற்குப் பின் நல்ல கதையை கிடைக்க வேண்டி இத்தனை நாள் காத்திருந்ததாகவும், அந்த நல்ல ஸ்டோரி கிடைத்துவிட்டதால், விரைவில் படத்தை எடுத்து அதை சீக்கிரம் ரிலீஸ் செய்யவுள்ளதாக ‘’தெரிவித்துள்ளார்.
அடுத்த படத்தின் அப்டேட்டை குழந்தைகளுடன் பகிர்ந்த
தருணம்#Legend #Legendsaravanan @yoursthelegend pic.twitter.com/LocspXpDuX— Legend Saravanan (@yoursthelegend) August 15, 2023