நில மாபியாக்களுக்கு துணை போகும் வட்டாட்சியர்..! திருப்பூரில் தொடரும் போராட்டம்..!
திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நில மாபியாக்களுக்கு துணை போகும் வட்டாட்சியரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் ஏலகிரி மலை கமிட்டியின் சார்பில் 100 ஆண்டு காலமாக ஏலகிரி மலையில் பூர்வீகமாக வாழ்ந்து வரும் இந்து மலையாளி பழங்குடி மக்களின் வீடுகள், அனுபவ நிலங்களையும் அபகரித்து, மலையை விட்டு வெளியேற்றிட முயற்சிக்கும், நில மாபியாக்களுக்கு துணை போகும் திருப்பத்தூர் வட்டாட்சியர் சிவப்பிரகாசம் அவர்களின் செயலை கண்டித்தும் அவர் மீது வன்கொடுமை சட்ட வழக்கு பதிவு செய்திட கோரியும், கன்னட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏலகிரி மலை கமிட்டி செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். மலைவாழ் மக்கள் சங்க மாநில தலைவர் டில்லி பாபு, மாநிலத் துணைத் தலைவர் சண்முகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் காசி, கேசவன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏலகிரி மலை முத்தானூர் கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாக நான்கைந்து தலைமுறைகளாக மலையாளி பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். மலைவாழ் மக்களின் அனுபவ நிலங்களில் மலை பயிர்களான வரகு, சாமை, துவரை, அவரை போன்ற பயிர்களை பயிரிட்டும் ஆடு மாடுகளை வளர்த்தும் விவசாயம் போன்ற வேலைகளை செய்து வாழ்ந்து வருகின்றனர்.
வருவாய்த்துறை அதிகாரிகளிடம் அவர்களின் அனுபவ நிலங்களுக்கும் குடியிருப்புகளுக்கும் பட்டா கேட்டும் வழங்காததை கண்டித்தும், நில மாபியா கும்பலுக்கு துணை போகும் நோக்கில் நிலங்களை அளவீடு செய்ய காவல் துறை துணையுடன் வந்த வட்டாட்சியர் சிவப்பிரகாசத்தின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.
1976 நீதிமன்ற ஆணையில் முத்தானூர் கிராமத்தில் அத்துமீறி நிலத்தை அபகரிக்கும் நோக்கத்தில் யாரும் செல்லக்கூடாது என்ற நீதிமன்ற ஆணை இருந்தும் நில மாபியாக்களுடன் கைகோர்த்துக்கொண்டு பழங்குடி மக்களின் நிலங்களை அபகரித்து நில மோசடி செய்பவர்களுக்கு துணை போகும் வட்டாட்சியர் மீது விசாரணை நடத்தி தண்டனை வழங்க வேண்டும் என கேட்டு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் பங்கேற்றனர்.
Discussion about this post