உம்மன் சாண்டி உடலுக்கு தலைவர்கள் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி..!!
கேரளா மாநிலம் புதுப்பள்ளி 1943ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி கோட்டயம் குமரகத்தில் பிறந்தவர் தான் மறைந்த முன்னாள் முதல்வர் “உம்மன் சாண்டி” சிறு வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். காங்கிரஸ் கட்சியில் சிறந்த தொண்டனாக செயல்பட்டார். பின் 1970ம் ஆண்டு புதுப்பள்ளி தொகுதியில் போட்டியிட்டு 27 வயதில் எம்.எல்.ஏ-வாக மக்களால் தேர்வு செய்யப்பட்டார்.
சி.பி.எம் கோட்டையான புதுப்பள்ளியில் அதற்கு முன் எம்.எல்.ஏ வாக இருந்த இ.எம்.ஜார்ஜ் என்பவரை தோற்கடித்து உம்மன் சாண்டி வெற்றி பெற்றதால்.., மக்களிடடையும் தொண்டர்களிடையும் இவரின் மதிப்பு கூடியது. ஏ.கே.ஆன்றணி 2004ம் ஆண்டு முதல்வர் பதவியை ராஜினாமா செய்தவர்.., எனவே அந்த இடத்திற்கு போட்டியிட்டு உம்மன் சாண்டி முதல்வராக வெற்றி பெற்றார். பின் 2006 முதல் 2011 வரை எதிர்கட்சி தலைவரானார்.
மீண்டும் அதற்கு பின் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மீண்டும் 2011ம் ஆண்டு முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அவரின் அரசியல் வாழ்வில் 2முறை முதல்வராகவும், 50 முறை எம்.எல்.ஏ வாகவும் பணியாற்றினார்.
இதற்கு முன் அவருக்கு கேன்சர் இருந்த நிலையில் உடல்நலம் பாதிப்பு அதிகமானது, பெங்களுருவில் இருக்கும் சின்மயா மிஷன் மருத்துவமனையில் நிமோனியா பாதிப்பால் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.., தீவிர சிகிச்சையில் இருந்த அவர் உடல்நல குறைவால், இன்று அதிகாலை 4.25 மணிக்கு காலமானார்.
கேரளா முதல்வர் பினராயி விஜயன் :
முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில் நானும் உம்மன் சாண்டியும் ஒரே ஆண்டில் தான் அரசியல் களத்தில் ஒன்றாக அடியெடுத்து வைத்தோம். மாணவர்களாக இருந்த போதில் இருந்தே நாங்கள் அரசியலில் பயணித்தோம்.

ஒரு காலகட்டத்தில் பொது வாழ்வில் ஈடுபட ஆரமித்தோம் அவர் மரணத்திற்கு இன்று நான் வருத்தம் தெரிவிக்கிறேன் என்பது மிகவும் என்னை சோதனைக்கு ஆளாகியுள்ளது. அவர் எங்களை விட்டு பிரிந்து விட்டார் என்பதை எங்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. “மக்களோடு மக்களாக நெருங்கி பழகிய ஒரு சிறந்த தலைவர்” தான் “உம்மன் சாண்டி” என்று பெருமையாக சொல்லும் அளவிற்கு செயல்பாட்டார்.
கார்கே புகழஞ்சலி :
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, உம்மன் சாண்டி அவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மக்களுக்கு அயராத சேவை செய்தவர்.., பல அர்ப்பணிப்புகளும் செய்தவர்.., உம்மின் சாண்டி அவரின் குடும்பாத்தாருக்கு ஆழந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் :
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், மறைந்த கேரளா முன்னாள் முதலமைச்சருக்கு நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.., பின் உம்மின் சாண்டி குறித்து பேசிய அவர், மக்களுக்காக அயராது உழைப்பார்.., தொடர்ந்து 50 ஆண்டுகள் எம்.எல்.ஏ வாக பணியாற்றினார். புதுப்பள்ளியில் 18,728 நாட்கள் சட்டமன்றத்தில் பிரதிநிதிதத்துவப் படுத்தி வரலாறு படைத்தவர். அன்னாரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்றேன் என கூறினார்.

















