கேரளா முன்னாள் முதல்வர் காலமானார்..!! கேரளாவில் இரண்டு நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பு..!!
கேரளா மாநிலம் புதுப்பள்ளி 1943ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி கோட்டயம் குமரகத்தில் பிறந்தவர் தான் மறைந்த முன்னாள் முதல்வர் “உம்மன் சாண்டி” சிறு வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். காங்கிரஸ் கட்சியில் சிறந்த தொண்டனாக செயல்பட்டார். பின் 1970ம் ஆண்டு புதுப்பள்ளி தொகுதியில் போட்டியிட்டு 27 வயதில் எம்.எல்.ஏ-வாக மக்களால் தேர்வு செய்யப்பட்டார்.
சி.பி.எம் கோட்டையான புதுப்பள்ளியில் அதற்கு முன் எம்.எல்.ஏ வாக இருந்த இ.எம்.ஜார்ஜ் என்பவரை தோற்கடித்து உம்மன் சாண்டி வெற்றி பெற்றதால்.., மக்களிடடையும் தொண்டர்களிடையும் இவரின் மதிப்பு கூடியது. ஏ.கே.ஆன்றணி 2004ம் ஆண்டு முதல்வர் பதவியை ராஜினாமா செய்தவர்.., எனவே அந்த இடத்திற்கு போட்டியிட்டு உம்மன் சாண்டி முதல்வராக வெற்றி பெற்றார். பின் 2006 முதல் 2011 வரை எதிர்கட்சி தலைவரானார்.
மீண்டும் அதற்கு பின் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மீண்டும் 2011ம் ஆண்டு முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அவரின் அரசியல் வாழ்வில் 2முறை முதல்வராகவும், 50 முறை எம்.எல்.ஏ வாகவும் பணியாற்றினார்.

இதற்கு முன் அவருக்கு கேன்சர் இருந்த நிலையில் உடல்நலம் பாதிப்பு அதிகமானது, பெங்களுருவில் இருக்கும் சின்மயா மிஷன் மருத்துவமனையில் நிமோனியா பாதிப்பால் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.., தீவிர சிகிச்சையில் இருந்த அவர் உடல்நல குறைவால், இன்று அதிகாலை 4.25 மணிக்கு காலமானார்.
முன்னாள் முதல்வர் காலம் ஆனதால் கேரளா மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அளித்து இரண்டு நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப் பட்டுள்ளது.
பெங்களுரூவில் இருக்கும் உம்மன் சாண்டி அவர்களது உடல் மதியம் 2மணி அளவில் விமானம் மூலம் திருவனந்தபுரம் கொண்டு வரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அவரின் உடல் திருவனந்த புரத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைக்கப்படும் எனவும்.., அவரின் உடலுக்கு பொது மக்களும் வந்து அஞ்சலி செலுத்தலாம் என்று கேரளா அரசு அறிவித்துள்ளது.
பொது மக்கள் அஞ்சலி செலுத்திய பின் நாளை மறுநாள் உம்மன் சாண்டியின் உடல் இறுதி சடங்கிற்காக புதுப்பள்ளி கொண்டு செல்லப்படும் எனவும் தெரிவித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவிற்கு கேரளா தொழில் அதிபர்களும்.., அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post