கோவை வால்பாறையில் ஏற்பட்ட நிலச்சரிவு..! முதலமைச்சர் ஸ்டாலின் நிதி அறிக்கை..?
கோவையில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவையின் பல்வேறு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. இன்று காலை கோவை வால்பாறையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.. இந்த நிலச்சரிவில் பாறை, மண் சரிந்து வீட்டின் மீது விழுந்துள்ளது. அதில் ஒரு பாட்டி மற்றும் அவரது பேத்தி விபத்தில் சிக்கியுள்ளனர்.
பின் அவர்களின் சத்தம் கேட்டு அங்கு வந்த அப்பகுதி மக்கள் ராஜேஸ்வரி மற்றும் தனப்பிரியாவை மீட்டுள்ளனர் ஆனால் மண் சரிந்து விழுந்ததில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளனர். பின் 108 ஆம்புலனஸ் உதவியுடன் அவர்களது உடலை மீட்டு உடற்கூர்வு ஆய்விற்கு அனுப்பிவைக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது..
இந்த விபத்து குறித்து விவரம் அறிந்த தமிழக முதலைமைச்சர் ஸ்டாலின் உயிரிழந்த குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். மேலும் இந்த விபத்தில் உயிர் இழந்த குடும்பங்களுக்கு இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..