குருந்தமலை கோவிலில் கும்பாபிஷேகம்
காரமடை அருகே ஹிந்து அறநிலைய துறைக்கு சொந்தமான குருந்தமலை வேலாயுத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் மிகவும் பழமையான ஒன்று. மே 29ம் தேதி கும்பாபிஷேகத்திற்கான வேலைகள் தொடங்கப் பட்டுள்ளது.
இன்று காலை 6 மணிக்கு, பக்தர்கள் கலச குடங்கள் ஏந்தி, சாலைகள் வழியாக ஊர்வலம் வந்து அபிஷேகம் செய்துள்ளனர். காலை 7:45க்கு தொடங்கிய கும்பாபிஷேகம், மாலை 8:45க்கு முடிந்தது.
அபிஷேகத்தை தொடர்ந்து.., மூலவருக்கு சில சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று மாலை 6மணிக்கு, திருக்கல்யாணமும், வீதி ஊர்வலமும் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.