கூண்டோடு ராஜினமா செய்தது ”கோழைத்தனம்.. தங்கலான் பட நாயகி கருத்து..!
ஹேமா கமிட்டியின் அறிக்கைக்கு பிறகு, பாலியல் அத்துமீறல்களை சந்தித்த பல்வேறு நடிகைகள், முன்னணி திரைக் கலைஞர்கள் மீது அடுத்தடுத்து வைக்கப்படும் பாலியல் குற்றச்சாட்டுகளால் மலையாள திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.
மேலும் மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் ப்ரெசிடண்ட் பொறுப்பில் இருக்கும் நடிகர் மோகன்லால் பாலியல் குற்ற சம்பவத்திற்கு எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்ததை தொடர்ந்து தனது பதவியையும் ராஜினமா செய்துள்ளார்.
இவர் மட்டுமல்லாமல் நடிகர் சங்கத்தில் இருக்கும் 17 நிர்வாகிகளும் கூண்டோடு தங்களது ராஜினமா கடிதத்தை சமர்பித்து ராஜினமா செய்தனர்.
இந்தநிலையில் நடிகை பார்வதி அம்மா நிர்வாகத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் ஒரே நேரத்தில் ராஜினமா செய்ததை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் நடிகர்கள் சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்திருப்பது கோழைத்தனமான செயல் என்று அவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.
குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறுவதற்கு பொறுப்பேற்க வேண்டிய நிலையில் இருந்து அவர்கள் எவ்வளவு கோழைத்தனமாக விலக்கிச் செல்கிறார்கள். அவர்களின் இந்த செயலால் மீண்டும் நம் மீது பொறுப்பு விழுகிறது என்று கூறியுள்ளார்.
-பவானி கார்த்திக்