கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு..!! உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு..!!
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட விவகாரத்தில், புலன் விசாரணை குறித்த புதிய நிலை அறிக்கையை செப்டம்பர் 17-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பெண் பயிற்சி மருத்துவர் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.. அது தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை காவல்துறையினர் கைது செய்த பின் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது., தற்போது இந்த வழக்கில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது..
அது தொடர்பாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முழுவதிலும் தீவிர சோதனை நடத்தி நடத்தப்பட்டதில் பயிற்சி மருத்துவர் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது உடற்கூறு ஆய்வில் வெளியானது..
மேலும் கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் நகத்தில் இருந்த ரத்த மாதிரி சாம்பிளை எடுத்து சோதனை செய்த போது அது சஞ்சய் ராயின் ரத்தம் என்பது உறுதி செய்யப்பட்டது., அதே சமயம் இந்த கொலையில் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற நோக்கத்தில் கொலையாளி என கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராயிடம் சிபிஐ அதிகாரிகள் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது…
கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி சஞ்சய் ராய் மற்றும் அவரது கூட்டாளி நண்பர்கள் அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு கொல்கத்தாவில் உள்ள சிகப்பு விளக்கு பகுதிகளுக்கு சென்று அங்கு உல்லாசமாக இருந்து விட்டு அங்கிருந்து செல்லும் வழியில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.. அதன் பின் தன்னுடைய காதலிக்கு போன் செய்து
ஆபாசமாக போட்டோக்களை அனுப்புமாறு கேட்டுள்ளார்.., அதை தொடர்ந்து 9ம் தேதி அதிகாலை ஆர்ஜி கர் மருத்துவமனையின் கருத்தரங்கு பகுதிக்கு சென்று மருத்துவர் தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளது தெரிவந்தது..
இந்த விவகாரத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையின்போது, சிபிஐ தாக்கல் செய்த நிலை அறிக்கையை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், புலன் விசாரணை தொடர்வதை கருத்தில் கொண்டு புதிய நிலை அறிக்கையை செப்டம்பர் 17-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..