கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட மருத்துவர் சங்கம்..!
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில், பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பணியாற்றி வந்தார். இந்த பெண் பயிற்சி மருத்துவர் இரவுநேர பணியில் இருந்தபோது, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்த சம்பவம், அந்த மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் மத்தியில், பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனால், தனியார் மற்றும் அரசு மருத்துவர்கள் ஒன்றிணைந்து, மிகப்பெரிய போராட்டத்தை அம்மாநிலத்தில் நடத்தி வருகின்றனர். மருத்துவர்களின் இந்த போராட்டத்தால், ஏழை எளிய மக்கள், பெரும் அவதி அடைந்துள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ, இன்று தங்களது அறிக்கைகளை, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்த அறிக்கைகளை பதிவு செய்த நீதிபதி, போராட்டத்தை நடத்தி வரும் மருத்துவர்கள் அனைவரும், மீண்டும் பணிக்குத் திரும்புமாறு அறிவுறுத்தினார்.
இந்தநிலையில் இதுதொடர்பாக, கொல்கத்தா மருத்துவர் சங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ”உச்சநீதிமன்ற அறிவுருத்தலை ஏற்று போரட்டத்தை வாபஸ் பெறுவதாக” தெரிவித்துள்ளனர்.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”