தொடரும் கொடைக்கானல் கொள்ளை..!! முற்று புள்ளி வைத்த போலிஸ்..!!
கொடைக்கானல் கீழ் மலை பண்ணைக்காடு பகுதியில் விவசாயியிடம் மோதிரம் மற்றும் பணத்தை திருடியவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலைப் பகுதியில் உள்ளது பண்ணைக்காடு. இந்த பகுதியைச் சேர்ந்த விவசாயி சுந்தரவடிவேல். இவர் ரத்த அழுத்தம் காரணமாக அடிக்கடி மயங்கி விழுந்து உள்ளார்.
இது சம்பந்தமாக கடந்த 31. 5 .2023ஆம் தேதி அன்று வத்தலகுண்டு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் பண்ணை காட்டிற்கு வந்துள்ளார்.
பண்ணைக்காடு பிரிவில் பேருந்து விட்டு இறங்கிய சுந்தர வடிவேலுக்கு மீண்டும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து இவர் தான் வைத்திருந்த குடிநீர் பாட்டிலில் இருந்து தண்ணீரை எடுத்து முகம் கழுவ முயன்றுள்ளார்.
தான் வைத்திருந்த ஒன்றரை பவுன் தங்க மோதிரம், செல்போன், 50,000 பணம் ஆகியவற்றை அருகில் வைத்து விட்டு முகத்தை கழுவி உள்ளார். இதை பார்த்துக் கொண்டிருந்த பண்ணைக்காடு ஆலடிப்பட்டியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் சுந்தர வடிவேலின் ஒன்றரைப்பவன் தங்க மோதிரம், செல்போன் , 50 ஆயிரத்தை திருடிக் கொண்டு தப்பிவிட்டார்.
இது பற்றி சுந்தரவ வடிவேலு கொடுத்த புகாரின் அடிப்படையில் தாண்டிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் சுந்தர வடிவேலின் மோதிரம் பணம் மற்றும் செல்போனை திருடியது செல்வகுமார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை அடுத்து இவரை கைது செய்து கொடைக்கானல் கோர்ட்டில் ஆஜர் செய்தனர். இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் கொடைக்கானல் நீதிபதி கார்த்திக் இறுதி விசாரணை நடத்தி விவசாயி சுந்தரவடிவேலிடம் ஒன்றரை பவுன் தங்க மோதிரம் மற்றும் செல்போன் 50 ஆயிரம் பணத்தை திருடிய செல்வக்குமாருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். பத்தாயிரம் ரூபாய் அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் ஆறு மாதம் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..