பிரபல அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்..! தாய்மார்களே உஷார்..!
வேலூர் அடுத்த அடுக்கம் பாறை அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி மாலை பிறந்த குழந்தை காணாமல் போக்கியுள்ளது, கடத்தப்பட்ட குழந்தையை 8 மணி நேரத்திலேயே போலீசார் மீட்டுள்ளனர்.
கண்ணமங்கலத்தை சேர்ந்த சுந்தர் என்பவரின் மனைவி சூரியகலா இவரால் .., பேசவோ கேட்கவோ முடியாது, ஆகஸ்ட் 17ம் தேதியன்று குழந்தை பிறந்துள்ளது.., பின் பிரசவ வார்டில் குழந்தை பிறக்கும் பொழுது உதவி செய்வதை போல நடித்து குழந்தையை கடத்தியுள்ளனர்.
பின் பிரசவ வார்டில் இருந்து நார்மல் வார்டிற்கு மாற்றிய பின் குழந்தை இன்னும் கொடுக்க வில்லை என பதறி போன பெற்றோர் மற்றும் உறவினர்கள்.., மருத்துவமனையில் கேட்டுள்ளனர்.., குழந்தையை அவரின் உறவினர் என ஒரு பெண் வாங்கி கொண்டு போனார் மருத்துவமனை தெரிவித்த நிலையில்.., இதனை தொடர்ந்து காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பெயரில் அங்கு வந்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.., அப்பொழுது அங்கிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்த போது, குழந்தையை கடத்தி செல்லபட்டது தெரியவந்தது.., அதில் இருந்த பெண்ணின் அடையாளங்களை வைத்து 8 மணி நேரத்தில் அந்த பெண்ணை பிடித்துள்ளனர்.
குழந்தையை கடத்திய பெண் வேலூரை சேர்ந்த பத்மா என்பது தெரியவந்தது.., நீண்ட வருடங்காளாக குழந்தை இல்லை என்பதால்.., இந்த குழந்தையை கடத்தினேன் என பத்மா போலீசில் தெரிவித்துள்ளார்.
குழந்தை கடத்தல் பிரிவின் கீழ் பத்மாவை இன்று காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..