கடத்தப்பட்ட தொழில் அதிபர்..!! கத்தி முனையில் மிரட்டல்..!! வந்த போன் கால்..?
திருப்பத்தூர் அருகே ஓட்டுனர் உரிமம் புதுப்பிக்க சென்ற தொழிலதிபரை கத்தி முனையில் கடத்தி சென்று 12 லட்சம் பணத்தை பறித்த கும்பல் இது தொடர்பாக கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
திரும்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் பிரபல சன்பீடி கம்பெனி தொழிலதிபரான இடையம்பட்டி பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவரின் மகன் தியாகராஜ் (39) இவர் முன்னாள் யூத் காங்கிரஸ் மாநில செயலாளராக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 23ம் தேதி எலவம்பட்டி பகுதியில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்திற்கு வாகன உரிமம் புதுப்பிக்க தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் மற்றும் காரில் வந்த எட்டு பேர் கொண்ட கும்பல் தியாகராஜ் சென்ற இருசக்கர வாகனத்தை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி காரில் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு வீட்டிற்குள் அழைத்து சென்று ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு தியாகராஜை அடித்து மிரட்டியுள்ளனர்.
அதன்பின் தியாகராஜ் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என் அப்பாவிடமும் நான் பேசுவதில்லை என கூறியுள்ளார். அதன்பின் தியாகராஜ் அவருடைய மச்சான் அரவிந்துக்கு போன் செய்யும்படி கூறியுள்ளார். அதனை தொடர்ந்து தியாகராஜ் செல்போனிலிருந்து அவருடைய மச்சான் அரவிந்துக்கு போன் செய்து ஒரு கோடி ரூபாய் பணம் கொண்டு வந்து கொடுத்தால் தியாகராஜனை விட்டு விடுவதாக கூறி மிரட்டியுள்ளனர்.
அதன் பின் 50 லட்சம் கொடுக்கும்படி கேட்டுள்ளனர். அதனை தொடர்ந்து 25 லட்சம் கேட்டுள்ளனர். அவ்வளவு பணம் இல்லை என தியாகராஜ் கூறியுள்ளார். இறுதியில் 12 லட்சம் பணத்தை கொடுப்பதாக தியாகராஜ் மச்சான் அரவிந்த் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள தர்மபுரி மேம்பாலம் கீழே ரூபாய் 12 லட்சத்தை கடத்தலில் ஈடுபட்ட கும்பலிடம் அரவிந்த் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
அதன் பின் தியாகராஜ் சட்டை கழட்டப்பட்ட நிலையில் கண்களை கட்டி தர்மபுரி மேம்பாலம் கீழே கடத்திச் சென்ற கும்பல் விட்டு சென்றுள்ளனர். அப்போது முகத்தில் தாடை உடைந்து முகம் முழுவதும் படுகாயத்துடன் இருந்த தியாகராஜ் ஆட்டோ ஓட்டுனர் உதவியுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்க சேர்ந்துள்ளார். அதன் பின் தன்னுடைய செல்போனில் இருந்து அவருடைய குடும்பத்தினருக்கு தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார். இது கடத்தல் சம்பவம் குறித்து தியாகராஜின் தந்தை யுவராஜ் கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது உறவினரான அரவிந்தன் மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு பேர் உட்பட மூன்று பேரை சந்தேகத்தின் பேரில் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..