கவரைப்பேட்டை இரயில் விபத்து…!! தீவிரமாக்கப்பட்ட பணிகள்..!! இன்று மாலைக்குள்..?
இன்று மாலைக்குள் இரயில் தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டு அதன் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது…
நேற்று இரவு மைசூரில் இருந்து ஆந்திரா வழியே தர்பங்கா செல்லும் “பாக்மதி அதிவிரைவு எஸ்பிரஸ்” சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே சிகனலுக்காக நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் ரயில் எண் (12578), மீது மோதி விபத்துக்குள்ளானது.
பெரம்பூரில் இருந்து நேற்று இரவு 7.30 மணிக்கு புறப்பட்ட இந்த பாக்மதி அதிவிரைவு எஸ்பிரஸ் நேற்று இரவு 8.27 மணியளவில் கவரைப்பேட்டையை வந்தடைய வேண்டிய நிலையில் கால தாமதமாக நேற்று இரவு 9.24 மணிக்கு வந்துள்ளது.
அப்போது தண்டவாளத்தில் சிகனலுக்காக நின்று கொண்டிருந்த சரக்கு இரயிலின் பின்புறத்தில் அதிவேகமாக வந்து மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது.. அந்த விபத்தில் 4 ஏசி பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியானது..
மேலும் சரக்கு இரயில் தடம் புரண்டதில் சில பெட்டிகளில் தீ பற்றியுள்ளது.. அதே சமயம் பயணிகள் ரயிலின் 13 பெட்டிகள் தடம்புரண்டுள்ளது. மற்றும் மூன்று பெட்டிகள் பக்கவாட்டில் சாய்ந்த நிலையில், 2 பெட்டிகள் ஒன்றின் மீது ஒன்று ஏறி உருக்குலைந்துள்ளது. இதுவரை இந்த விபத்தில், 19 பேர் படுகாயம் அடைந்து இருப்பதாக மீட்பு பணியினர் தெரிவித்துள்ளனர்.. ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது…
தற்போது இந்த விபத்தில் தடம் புரண்டுள்ள இரயில் பெட்டிகளை அகற்றும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது.. இன்னும் 2 பெட்டிகள் மட்டுமே அகற்றப்பட வேண்டியுள்ள நிலையில், 150 டன் எடை வரை கையாளும் திறன் கொண்ட கனரக க்ரேன் கொண்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 4 வழித்தடத்தில் 2 வழித்தடம் மாலைக்குள் சீரமைக்கப்பட்டு மீண்டும் ரயில்கள் இயக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..