கரூரில் ஈரோட்டை சேர்ந்த திமுக பெண் கவுன்சிலர் கொலையில் கதிர்வேல் நித்யா தம்பதி சிக்கினர்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகேயுள்ள சென்னசமுத்திரம் பேரூராட்சி திமுக பெண் கவுன்சிலர் ரூபா நேற்று கரூர் பரமத்தி அருகே பாலமலை காட்டுப் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். க. பரமத்தி காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். விசாரணையில், ரூபவை கொன்றது நொய்யலை சேர்ந்த கதிர்வேல் நித்யா என தெரியவந்துள்ளது.
தம்பதி கரூர் நொய்யலில் டீ கடை நடத்தி வருவதாகவும் கடன் பிரச்னையில் உள்ள தம்பதி ரூபாவை கொன்று அவர் கழுத்தில் அணிந்திருந்த 9 சவரன் நகையை திருடியதாகவும் விசாரணையில் தகவல். உயிரிழந்த ரூபாவும், நித்யாவும் நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடித்த போலீசார் எஸ்பி சுந்தரவதனம் பாராட்டினார்.