கரூரில் பழைய 50 பைசாவிற்கு 15 ரூபாய் மதிப்பிலான காபி என்ற சலுகை விற்பனையால் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கடையில் குவிந்தனர்.
கரூர் கே.வி.பி நகர் பகுதியைச் சேர்ந்த சதீஸ் கண்ணா- ரேணுகாதேவி என்ற இளம் தம்பதியினர், கரூர் – கோவை சாலையில் 80 – ஸ் காபி க்ளப் என்ற பெயரில் காபி கடை கடந்த ஒராண்டு காலமாக நடத்தி வருகின்றனர். கடை திறந்து ஓராண்டு கடந்துவிட்டதை கொண்டாடும் விதமாக அசத்தலான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டனர்.
வாடிக்கையாளர் மற்றும் மக்களை கவரும் வகையில் சற்று வித்தியாசமாக இன்று ஒரு நாள் மட்டும் சலுகை விற்பனையாக காபி 50 பைசா என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதையடுத்து மக்கள் கூட்டமாக அப்பகுதியில் குவிந்தனர். செல்லாத பழைய 50 பைசாவிற்கு ஒரு காபி என்ற அறிவிப்பு ஒருபுறம் இருப்பினும், மக்கள் கைகளில் அந்த நாணயம் தென்பட்டு பல வருடங்களாகின்றது.
மற்ற நாட்களில் ரூ 15க்கு விற்பனையாகும் காபி இன்று ஒரு நாள் மட்டும் 50 பைசா மட்டும் என்பதால் மக்கள் தேடிப் பிடித்து 50 பைசாவுடன் காபி கடையில் குவிந்தனர்.