பிரசாதத்தை வாங்க மறுத்த கார்த்தி? நடந்தது என்ன? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி..!
இன்று உலகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தியை வெகு விமர்சையாக மக்கள் கொண்டாடி வருகின்றனர். இதே போல் சென்னையில் நடிகர் சங்கம் சார்பில் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. இந்த விழா தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி தலைமையில் நடைப்பெற்றது.
பின்னர் பூஜை முடிந்தபிறகு விநாயகருக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை நடிகர் கார்த்திக்கு அர்ச்சகர் வழங்கினார். ஆனால் அந்த பிரசாதத்தை நடிகர் கார்த்தி வாங்க மறுத்துள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கார்த்தியை விமர்சித்து வந்தனர். இவ்வாறு சர்ச்சைகள் பரவி வரும் நிலையில் உண்மை என்ன என்பது குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதாவது விழாவில் பூஜைக்கு பிறகு பாயாசம் மாதிரியான பிரசாதம் வழங்கப்பட்டது. அதனை கார்த்தி வாங்கி சாப்பிட்ட பிறகே பஞ்சாமிர்தம் போன்ற பிரசாதம் வழங்கப்பட்டது. அதனை தான் கார்த்தி வாங்காமல் மற்றவர்களுக்கு வழங்கும்படி கூறியுள்ளார். நடந்தது இது தான் ஆனால் உண்மை அறியாத சிலர் கார்த்தியை விமர்ச்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.