ஜி-20 நாடுகள் கூட்டமைப்புக்கு, வரும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ளது.அடுத்த ஆண்டு ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி லோகோ, கருப்பொருள், மற்றும் இணையதளம் போன்றவற்றை திறந்து வைத்தார். தாமரை மலர்வது போல் இருக்கும் இந்த லோகோ இந்தியாவின் நம்பிக்கை அடையாளமாக திகள்கிறது என்றார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அதீத திறமையால் புதிய இந்தியா உலக நாடுகளை ஈர்த்து வருகிறது, நாம் அவர்களை வழிநடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்பதை விட நாம் இன்னும் திறனாக செயல்படவேண்டும் அவ்வாறு செயல்படுவது நமது கடமையாகும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ஒரே பூமி, ஒரே சுகாதாரம் போன்ற முன்னெடுப்புகள் மூலம் நீடித்த வளர்ச்சியில் கவனம் செலுத்தி, இந்தியா உலக நாடுகளுக்கு தலைமையாக உருவாகி வருகிறது என்றார்.
இந்தியா தலைமை பொறுப்பை ஏற்கவுள்ள நிலையில் உலக வளர்ச்சிக்கு இந்தியா இன்னும் எவ்வாறேல்லாம் பங்காற்ற முடியும் என்பது குறித்து யோசனைகளை வழங்குமாறு மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.