சிறுமியை அழைத்து சென்று தனிக்குடித்தனம் செய்த வாலிபர்..!
திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிறுமி, பூ வாங்க சென்று வந்த போது திருப்பூர் பூ மார்க்கெட்டில் பணியாற்றி வந்த கார்த்திக் வயது 25 என்பவர் பழக்கமாகி உள்ளார் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 19.7.2024 அன்று கார்த்திக் தனது சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு அழைத்துச் சென்று ஆனைமலை பகுதியில் தனது தாயார் உதவியுடன் வீடு வாடகைக்கு எடுத்து தனி குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் சிறுமியை காணவில்லை என கொடுத்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த அனுப்பர்பாளையம் போலீசார் கடந்த ஆகஸ்ட் மாதம் கார்த்திக் என்பவர் சிறுமியை கடத்திச் சென்றதை கண்டறிந்து பொள்ளாச்சி சென்று சிறுமியை மீட்டு வந்தனர்.
உடன் சிறுமி கடத்தலுக்கு துணையாக இருந்த கார்த்திக்கின் தாயார் உஷா என்பவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர் தொடர்ந்து தலைமறைவாக இருந்த கார்த்திக் பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் சுற்றித் திரிவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து கார்த்திக்கை சுற்றி வளைத்த போலீசார் கைது செய்து இன்று திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போக்ஸோ வழக்கு பதிவு செய்த மகளிர் போலீசார் கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். காவல்துறையினரின் தொடர் விசாரணையில் கார்த்திக் மீது பல்வேறு திருட்டு வழக்குகளும் அடிதடி வழக்குகளும் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
