காமராஜர் 122வது பிறந்தநாள் – முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், கல்வி கண் திறந்த கர்மவீரர் என்று மக்கள் அழைக்கப்பட்ட கர்மவீரர் காமராஜர் இவர் ஜூலை 15ம் தேதி 1903ம் ஆண்டு பிறந்தார். ஓர் இந்திய விடுதலைப் போராட்ட ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி ஆக திகழ்ந்தவர். இவர் ஏப்ரல்13ம் தேதி 1954ம் ஆண்டு முதல் அக்டோபர் 2 1963ம் ஆண்டு வரை தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார்.
இவர் 1964ம் ஆண்டு முதல் 1967ம் ஆண்டு வரை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பணியாற்றினார். அப்பொழுது லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திரா காந்தி ஆகியோர் இந்தியப் பிரதமர் பதவிக்கு உயர்த்தப்படுவதற்குக் காரணமாக இருந்தார்.
அதன் காரணமாக 1960ம் ஆண்டு களில் இந்திய அரசியலில் இவர் “கிங்மேக்கர்” (அரசர்களை உருவாக்குபவர்) என்று பெயர் பெற்றார். இவரது பிறந்தநாளை இன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பள்ளிக்கல்லூரிகளும் கொண்டாடி வருகின்றனர்.
கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளில் #TNBreakfastScheme-ஐ விரிவுபடுத்தி அவருக்குப் பெருமை சேர்த்தேன்!
மங்காப் புகழ்கொண்ட அவரது வாழ்வையும் தொண்டையும் #கல்விவளர்ச்சிநாள்-இல் தமிழ்நாட்டு மாணவர்களுக்குப் பயிற்றுவிப்போம்! pic.twitter.com/AOyXLbXZxf
— M.K.Stalin (@mkstalin) July 15, 2024
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம், கீழச்சேரி, அரசு உதவி பெறும் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் காமராஜரின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளில் முதலமைச்சர் காலை உணவுத்திட்டத்தை விரிவுபடுத்தி அவருக்குப் பெருமை சேர்த்தேன். மங்காப் புகழ்கொண்ட அவரது வாழ்வையும் தொண்டையும் இந்த கல்வி வளர்ச்சிநாளில் தமிழ்நாட்டு மாணவர்களுக்குப் பயிற்றுவிப்போம். என முதலமைச்சர் ஸ்டாலின் இணையதளம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..