பூட்டு நகரத்தின் பிரபலமான இடங்கள்..!
பூட்டு நகரமாக திகழும் திண்டுக்கல் மாவட்டம் பிரியாணிக்கு பூட்டுக்கும் பிரபலமானது. மேலும் இங்கு விவசாயம் என்பது மிகவும் முக்கியமான தொழிலாக உள்ளது. இந்த இடத்தில் வாழை, நெல், திராட்சை, கரும்பு, காய்கறிகள் போன்றவை பயிரிடப்பட்டு தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இங்குள்ள மிகப்பெரிய காய்கறி மார்கெட்டாக ஒட்டன்சத்திரம் திகழ்கிறது. இத்தனை சிறப்புகளை பெருமைகளை பெற்றுள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் பலவிதமான சுற்றுலா தளங்கள் உள்ளது.
திண்டுக்கல் கோட்டை:
இம்மாவட்டத்திற்கு திண்டுக்கல் என பெயர் உருவாக மிக முக்கியமாக திகழ்ந்தது இந்த மலை மட்டுமே. இந்த மலையில் இருந்து பார்க்கும்போது நகரமே அழகாக தெரியும்.
கோட்டை மாரியம்மன் கோவில்:
இந்த மாரியம்மன் கோவில் 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகவும், திப்பு சுல்தான் அவர்களால் அமைந்ததாகவும் உள்ளது. இந்த கோவிலில் மாரியம்மன் மற்றும் விநாயகர் சிலை அமைந்துள்ளது.
தாடிக்கொம்பு பெருமாள் கோவில்:
இந்த கோவிலானது திண்டுக்கலில் இருந்து கரூர் போகும் வழியில் சுமார் 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பெருமாளானவர் மூலவராக உள்ளார். இந்த கோவிலில் சித்திரையில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடைபெற்று வருகிறது.
பேகம்பூர் பள்ளி வாசல்:
இந்த பள்ளிவாசல் ஐதர் அலி காலத்தில் கட்டப்பட்டு 300 ஆண்டுகள் பழமையை கொண்டது. இப்பள்ளிவாசலில் ராஜா ஹைதர் அலி அவர்களின் சகோதரி அடக்கம் செய்துள்ளார்கள்.
சின்னாளப்பட்டி:
திண்டுக்கலில் இருக்கும் ஒரு அழகிய கிராமமாக சின்னாளப்பட்டி உள்ளது. இந்த கிராமம் புடவைகளுக்கு பெருமை வாய்ந்தது. இங்கு நடைபெறும் அழகர் திருவிழாவை காண ஏராளமான பக்தர்கள் படையெடுத்து வருகிறார்கள்.
கொடைக்கானல்:
மலைகளின் அரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் திண்டுக்கலில் இருந்து 94 கி.மீ தொலைவில் உள்ளது. உலகின் பல்வேறு இடங்களில் இருந்து வரும் மக்களுக்கு கோடைக்காலங்களில் கொடைக்கானலானது சுகமாக வைத்திருக்கிறது.
பழனி கோவில்:
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி மலையானது திண்டுக்கலில் அமைந்துள்ளது. இங்கு தைப்பூசம் மற்றும் சித்ரா பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகிறார்கள். இந்த மலையில் இருந்து கீழே பார்த்தல் பழனி அழகே அழகாக தெரியும்.
காமராஜர் ஏரி:
பறவைகள் அதிகம் கூடும் இடமாக காமராஜர் ஏரி ஆத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரியானது சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பறவை ஆர்வலர்கள் அதிகம் கூடும் இடமாக காமராஜர் ஏரி உள்ளது.