பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிய கமல் ஹாசன்.. புதிய தொகுப்பாளர் இந்த பிரபலமா..!
தனியார் தொலைக்காட்சியில் ஔிபரப்பாகி வந்த பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவனத்தையும் பெற்றது.
இந்த நிகழ்ச்சி தமிழில் இதுவரை ஏழு சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. கடந்த 7 சீசன்களையும் உலக நாயகன் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தார் . இந்த நிலையில் திடீரென்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுத்து வழங்குவதில் இருந்து விலகி உள்ளதாக நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டார்.
கமல்ஹாசன் நிறைய படங்களில் கமிட்டாகி உள்ளதால் பிக் பாஸில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது.
புதிய தொகுப்பாளர்:
இதனை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இந்தநிலையில் கமல்ஹாசனுக்கு பதிலாக பிக் பாஸ் தொகுத்து வழங்கப்போவது யார் என்கிற எதிர்ப்பார்ப்பு மற்றும் கேள்விகள் ரசிகர்களின் மத்தியில் எழுந்து இருக்கிறது.
இந்தநிலையில் தற்போது அந்த தொலைக்காட்சி நிறுவனம் விஜய் சேதுபதி, நயன்தாரா உடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது. அது வெறும் வதந்தி தானா அல்லது அவர்கள் பிக் பாஸ் தொகுத்து வழங்க வாய்ப்பு இருக்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-பவானி கார்த்திக்