கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் நடைபெற்ற சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் வீடியோ வெளியிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கடந்த ஏப்ரல் 11-ம் தேதி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கோயிலுக்குள் தரிசனம் செய்ய தனது காலணியை கழற்றி விட்டு சென்ற போது கோயிலின் முன்பு உள்ள காலணி அப்புறப்படுத்த வேண்டும் என தனது உதவியாளரிடம் அறிவுறுத்தியதாகவும் தனது உதவியாளர் முகிலன் தவறுதலாக தனது காலணியை கையில் எடுத்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் இந்த சம்பவம் சிறுவயது முதல் சமூகநீதி மற்றும் மனிதாபிமானத்தை பின்பற்றி வரும் நான் இந்த சம்பவத்திற்கு வருத்தத்தை தெரிவித்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கோயில் பிரகாரத்திற்குள் காலணிகள் இருப்பதை கண்டு அதனை அப்புறப்படுத்த வேண்டும் என கூறினேன் ஆனால் பின்னால் இருந்த எனது உதவியாளர் தனது காலணியை எடுத்து சென்றது தெரிந்து இது போல் செய்யக்கூடாது என அறிவுரை கூறினேன் என்றும்,கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்றதாகா சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவிற்கு தனது வருத்தங்களை தெரிவித்து மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் பேசியுள்ளார்.
Discussion about this post