கடந்த சில மாதங்களாகவே நீடித்து வந்த ரபேல் வாட்ச் ரசீது விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக நேற்று அண்ணாமலை அதற்கான பில்லை வெளியிட்டார். இந்நிலையில் கோவையில் உள்ள சிம்சம் வாட்ச் விற்பனை கடை அந்த பில் குறித்து பரபரப்பான தகவல் ஒன்றிணை வெளியிட்டுள்ளது.
சென்னையில் ரூ.3 லட்சத்திற்கு ரஃபேல் வாட்சை வாங்கியதாக கூறிய அண்ணாமலை, அதற்கான பில்லை வெளியிட்டார். ஆனால் அந்த ரபேல் வாட்ச், சேரலாதன் என்பவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு கோவையில் உள்ள தங்களது கடையில் இருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அதில் சேரலாதன் இராமகிருஷ்ணன் என்ற பெயரில் கடந்த 2021 ம் தேதி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அதில் அவருடைய தொடர்பு எண்ணும், ஜி.எஸ்.டி எண்ணும் அடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோவை பந்தய சாலையில் இயங்கிவரும் சிம்சன் வாட்ச் கடையின் கிளை மேலாளர் பிரசாத் என்பவர், தங்களது கடையில் தான், சேரலாதன் ராமகிருஷ்ணன் என்பவர் ரஃபேல் வாட்சை வாங்கியதாக கூறியுள்ளார்.
கோவையைச் சேர்ந்த சேரலாதன் ராமகிருஷ்ணனிடம் தான் இந்த வாட்சுகள் இருந்தன. ரூ.3 லட்சம் ரூபாய்க்கு ரஃபேல் வாட்சை கோவை சேரலாதன் ராமகிருஷ்ணனிடம் பெற்றுக் கொண்டதாக அண்ணாமலை கூறியிருந்தார். அப்படியானால் அண்ணாமலை சொல்லும் அந்த சேரலாதன் என்பவர் உண்மையான கேரக்டராக அல்லது கற்பனை கதாபாத்திரமா? என பல்வேறு கேள்விகள் எழுந்து வந்தது குறிப்பிடத்தக்கது.