கலைமகனே கலங்காதே..!! லியோ படத்தில் மேலும் ஒரு நெருக்கடி..!! ஆத்திரமான ரசிகர்கள்..!!
நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வருகிற அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ள படம் தான் “லியோ”.. லியோ படத்தில் கெட்ட வார்த்தை இடம் பெற்று இருப்பதாக கூறி படத்தில் சென்சார் கட் பயன் படுத்தாமல் பேசி இருப்பதாக கூறி.. பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்..
அது மட்டுமின்றி படம் வெளியாகும் தேதி அன்று ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.., இந்நிலையில் மேலும் படத்திற்கு ஒரு சிக்கல் வந்துள்ளது..
லியோ படம் திரையிட்ட பின் அரசாணையை மீறி கெட்ட வார்த்தையுடன் படம் வெளியீடப்பட்டால் திரையரங்கின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது..
படம் வெளியாக இருக்கும் நிலையில் மேலும்., மேலும் படத்திற்கான நெருக்கடி தருவதால்..
ரசிகர்கள் ஆதங்கமாகி உள்ளனர் மேலும் இணையதளம் பக்கத்தில் தங்களின் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்..