சிம்புவின் கிசு கிசு நடிகைக்கு 1000 கோடி பட்ஜெட்டில் படம்..!!
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொடிகட்டி பறக்கும் நயன்தாரா, ஐயா படத்தில் அறிமுகமாகி.., குசேலன், பில்லா, வில்லு, வல்லவன், சந்திரமுகி போன்ற படங்களில் நடித்தார்.. ரசிகர்களையும் கவர செய்தார்…
சிம்புவுடன் ஏற்பட்ட கிசு கிசு.., பிரபுதேவாவுடன் இருந்த ரிலேஷன்ஷிப் இவரின் சினிமா மார்கெட்டை காலி செய்தது.., ஒரு கம் பேக் படமாகவும்.., வெற்றி படமாகவும் இவருக்கு “ராஜா ராணி” இருந்து..
இதனை தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டதையும் பெற்றார், லேடி சூப்பர் ஸ்டார் படம்னா சும்மாவா என சொல்ல வைக்கும் அளவில் ஜவான் படம் இருந்தது..
ஷாருக்கானுடன் நடித்து இந்தியிலும் அறிமுகமானார். இந்த படம் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்ததோடு நயன்தாராவை ஹிந்திரசிகர்கள் மத்தியிலும் நயன்தாராவை பிரபலமாக்கியுள்ளது.
இதனை தொடர்ந்து மற்றும் ஒரு ஹிந்திபடத்தில் நடிப்பதற்கும் நயன்தாராவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஹிந்தியில் புகழ்பெற்ற டைரக்டரும், தயாரிப்பாளருமான “சஞ்சய் லீலா பன்சாலி” மிக பெரிய பட்ஜெட்டில் “பைஜூ பாவ்ரா” என்ற பிரமாண்ட படத்தை எடுக்கப்போவதாக ஒரு அப்டேட் கொடுத்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் நாயகனாக ரன்வீர் சிங், நாயகியாக அலியாபட் ஆகியோர் நடிக்க உள்ளனர். இந்த படத்தில்தான் நயன்தாராவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க போவதாக ஒரு பேச்சு வெளியாகியுள்ளது..
இந்த படத்தில் நடிப்பது நயன்தாரா சம்பந்தமாக, விக்னேஷ் சிவனிடம் சஞ்சய்லீலா பன்சாலியை பற்றி அவர்களை சந்தித்து பேசி இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனாலும் படத்தில் நயன்தாரா நடிப்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை. இதில் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொண்டால் படத்துக்கு மேலும் பரபரப்பு கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க உள்ளது.
Discussion about this post