சந்தோஷமான வாழ்க்கை வாழ இதை கடந்து போனாலே போதும்..!! குட்டிஸ்டோரி-18
கிராமத்துல கூலி வேலை செய்யுற ஒருத்தன் இருக்கான் அவன் பேரு ராஜு , ஒரு நாள் அவன் ரொம்பவே சோகமா இருக்கான், வாழ்க்கையே வெறுக்குற மாதிரி இருக்கு அப்படின்னு யோசிசுட்டே…
ஒரு நாள் ராஜு என்ன பண்றாம், முனிவர் போய் பாக்கலாம் அப்படினு சொல்லிட்டு காட்டுக்கு கெளம்பி போயிடுறான்.
அங்க இருந்த முனிவர் உனக்கு என்னப்பா பிரச்சனை..? சொல்லுப்பா.., அப்படினு கேட்குறாரு, எனக்கு வாழ்க்கையே பிரச்சனையா தான் சாமியாரே இருக்கு.
இந்த சோகம், கஷ்டம், வறுமை மட்டும் தான் இருக்கு சந்தோஷம்னு ஒன்னு இல்லவே இல்ல அப்படினு ராஜு சொல்லுறான்.. அதுக்கு நான் என்னப்பா பண்ணனும் முனிவர் கேட்குறாரு,
ராஜு சொல்லுறான். ஏன் வாழ்க்கையில சந்தோஷம் பொங்கணும், மகிழ்ச்சி நிறைய இருக்கணும் அதுக்கு ஒரு வழி சொல்லுங்க கேட்குறான்..
அதுக்கு அந்த முனிவர்.., சரி டீ சாப்பிடுறியா கேட்குறாரு , டீயா..? சரி சாப்பிடுறன் அப்படினு சொல்லுறாம்,
அதுக்கு முனிவர் என்ன பண்றாரு ஒரு டம்ளர்ல டீ தூள் எடுத்துட்டு வந்து நீ இத முதல சாப்பிட்டு காட்டு அதுக்கு அப்புறம் நான் பால் தண்ணி சர்க்கரை எல்லாம் கொண்டு வரன் சொல்லுறாரு..
அதுக்கு ராஜு சொல்லுறான் முனிவரே இது எல்லாம் கலந்தா தான் டீ வரும் நீங்க என்ன..? எல்லாம் தனி தனியா சாப்பிட சொல்லுறீங்க அப்படினு கேட்குறாம்,
அதுக்கு அந்த முனிவர் சொல்லுறாரு ஒரு “டீ” யா எப்படி தனி தனியா குடிக்க முடியாதோ அது மாதிரி தான் நம்ப வாழ்க்கையும், தனி தனியா பிரிச்சி வாழ முடியாது..
இதுல இருந்து நம்ப தெரிஞ்சிக்க வேண்டியது என்னனா சோகம், கஷ்டம் வறுமை இது எல்லாம் கலந்தது தான் வாழ்க்கை அதை நம்ம கடந்து தான் சந்தோஷமான பாதையில போக முடியும்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..