நம்ம வேலை என்னவோ அத மட்டும் பாக்கணும் அடுத்தவங்க வேலைல மூக்கை நொளச்சா இப்படி தான் நடக்கும்..!! குட்டி ஸ்டோரி-16
ஒரு வீட்டுல ஒரு பூனையும், நாயும் இருக்கு.., ராத்திரி நேரத்தில திருடன் அந்த வீட்டுக்கு கொள்ளை அடிக்க வாரான், அந்த வீட்டோட ஓனர் நல்ல தூங்கிட்டு இருக்காரு..
அதுனால இந்த திருடன் கதவை ஒடைச்சிட்டு போனது அவருக்கு தெரியல, அங்க இருந்த நாய் அத பாத்துட்டு அமைதியவே இருக்கு…
மனசுக்குள்ள என்ன நினைக்குது.., இவ என்ன நமக்கு சோர போடுறான் இவனுக்கு ஏன் நம்ம ஹெல்ப் பண்ணணும் அப்படினு சொல்லிட்டு அமைதியவே இருக்கு..
அந்த பூனை நாயை பாத்து யோசிக்குது என்ன இந்த நாய் அமைதியவே உக்காந்திருக்கு, இந்த ஓனர் எழுப்பாம அமைதியவே இருக்கே, நம்பளாச்சி ஓனர எழுப்புவோம் அப்படினு சொல்லி மியாவ், மியாவ் அப்படினு கத்துது..
உடனே அங்க இருந்த திருடன் ஓடிப்போறான் அதை பார்த்த அந்த ஓனர் எழுந்து வந்து ஒரு கட்டையால பூனையை அடிச்சிட்டு, அறிவுகெட்ட பூனை நேரம் காலம் தெரியாம கத்திட்டு இருக்கு அப்படினு சொல்லிட்டு திரும்பவும் தூங்கபோயிறாறு .
அப்போ அந்த நாய் இந்த பூனையை பாத்து சிரிச்சுகிட்டே சொல்லுது இப்போ தெரியுதா நான் ஏன் அமைதியா இருந்தேனு..,
இதுல இருந்து நம்ப தெரிஞ்சுக்க வேண்டியது ஒன்னே ஒண்ணுதான் நம்மளோட வேலை என்னவோ அத மட்டும் பாக்கணும், அடுத்தவங்க வேலைய பாத்தா இப்படித்தான்..
நீங்களும் உங்க வாழ்க்கைல உங்க வேலைய மட்டும் பாருங்க அடுத்தவங்க வேலைல மூக்க நொழச்சிங்கனா இப்படி தான் நடக்கும்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..