வீட்டில் எப்போதும் தெய்வசக்தி நிறைந்திருக்க இதை பண்ணுங்க போதும்..!!
நம் வீட்டில் தெய்வீக சக்தி எப்பொழுதும் நிறைந்திருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும், அப்படி இருந்தால் வீட்டில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் செல்வச்செழிப்பும் நிறைந்திருக்கும்.., கஷ்டமும் ஏற்படாது எனவே தெய்வ சக்தி நிறைந்திருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும்.
வீட்டில் தெய்வீக சக்தி எப்போதும் நிறைந்திருக்க இருக்க இதை மட்டும் செய்து பாருங்க..
ஒரு பாத்திரத்தில் பன்னீர் அல்லது தண்ணீர் எடுத்துக் கொண்டு. அதில் ஒரு கைபிடி அளவிற்கு சுவாமிக்கு அர்ச்சனை செய்த மல்லிகைப்பூ பூவை எடுத்து, அந்த பன்னீர் அல்லது தண்ணீரில் கலக்க வேண்டும்..
பின் சிறிதளவு திருநீரை எடுத்து மனதார கடவுளை வேண்டி அதில் போட வேண்டும். அனைத்தையும் ஒன்றாக கலந்து, அந்த தண்ணீருக்குள் கை வைத்து, “ஓம் குபேராய நமஹ மகாலட்சுமியே நமஹ” எனும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
அதற்கு பிறகு ஒரு மாவிலையை எடுத்து அந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும்.,
அதன் பின் பூஜை அறைக்கு சென்று, தீபம் ஏற்றி தீப ஆராதனை செய்து பூஜைகள் செய்து வழிபாடு செய்ய வேண்டும். இவற்றை செய்து முடித்த சிறிது நேரத்திலேயே வீட்டில் தெய்வீக மனம் வீசுவதை உணர முடியும்.
இந்த பரிகாரத்தை தினமும் அல்லது வாரத்திற்கு ஒரு முறை வெள்ளிக்கிழமையில் செய்யலாம். மாலை 05.30 மணி முதல் 6 மணிக்கு செய்வது சிறப்பு.
இந்த பரிகாரத்தை ராகு காலம், எமகண்டம் தவிர்த்து மற்ற எந்த நாளிலும், எந்த நேரத்திலும் செய்யலாம்.
வீட்டில் மட்டுமின்றி, வியாபாரம் மற்றும் தொழில் செய்யும் இடங்களிலும் இதை செய்வது நேர்மறை ஆற்றலை உருவாகி, லாபம் பெருக காரணமாக இருக்கும்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..