கருப்பையில் நீர்க்கட்டி.. கருவுருதலில் சிக்கலா..?
இன்றைய காலக்கட்டத்தில் பி.சி.ஓ.எஸ் (பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்) என்கிற கருப்பையில் நீர்க்கட்டி உருவாகுவதை அதிக பெண்கள் எதிர்கொள்கிறார்கள்.
பெண்களுக்கு ஹார்மோன் சுரப்பில் ஏற்ப்படும் கோளாறுகளால் இத்தகைய குறைபாடு ஏற்ப்படுகிறது.
இது டெஸ்டோஸ்டிரான் அதிகமாக சுரப்பது, சீரற்ற மாதவிடாய் மற்றும் கருப்பை விரிவாதல் போன்ற காரணங்களால் உருவாகிறது.
பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் அறிகுறிகள் என்னவென்றால் ஒழுங்கற்ற மாதவிடாய் முகப்பரு அசாதாரண முடி வளர்ச்சி (முகத்தில், கன்னத்தில்,மீசை முடி) தோல் நிறம் மாறுதல், உடல் எடை அதிகரிப்பு, கூந்தல் உதிர்வு, பி.சி.ஓ.எஸ் பிரச்சனை இருப்பவர்கள் குழந்தை பேறை எதிர்நோக்கும் போது முதலில் பி.சி.ஓ.எஸ் -ஐ கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிடில் அது கரு உண்டாவதில் பிரச்சனையை ஏற்ப்படுத்தும்.
பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் பிரச்சனையை கொண்டிருப்பவர்கள் முதலில் மாதவிடாயை சீர் செய்ய வேண்டும். கருவுறுதலுக்கு முக்கியமானது மாதவிடாய் சீராக இருப்பது தான்.
பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் இருக்கும் நபர் தங்களின் உயரத்திற்கு ஏற்றவாறு எடையை கொண்டிருக்க வேண்டும். உடல் எடை அதிகமாக இருந்தாலும் உடல் எடையை கண்டிப்பாக குறைக்க வேண்டும். மேலும் உணவு முறையையும் சீராக வைத்திருக்க வேண்டும்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.