ஜிவிபிரகாஷ்க்கு அறிவுறுத்திய ஏ.ஆர்.ரகுமான்..!! ஜிவி கொடுத்த பதில்..?
கோலிவுட்டில் பேசும் பொருளாக வலம் வந்து கொண்டிருப்பது ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி விவாகரத்து தான்.
ஜிவி பிரகாஷ்-சைந்தவி :
வெயில் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் அறிமுகமானர். முதல் பாடலிலேயே ரசிகர்களை கவர்ந்தார். பின்னர் இசைகலைஞரான தனது பள்ளி கால தோழியான சைந்தவியை 2013 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில தினங்களகவே இருவரும் பிரிவதாக தகவல் பரவி வந்த நிலையில் நேற்று தங்களின் பதினொரு வருட திருமண வாழ்க்கை இருவருடைய சம்மதத்துடன் முடிவுக்கு வந்தது என விவாகரத்து பெற்றதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிட்டார்.இது அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏ.ஆர் ரஹமான் கூறியது :
இரண்டு பேரும் விவாகரத்து செய்யப்போகிறார்கள் என்பதை அறிந்த ஏ.ஆர்.ரஹ்மான், ஜிவி பிரகாஷை அழைத்து, ‘குடும்பம் வேறு தொழில் வேறு. உனக்குதான் இசையமைக்க நிறைய படங்கள் வருகின்றது தானே அதில் கவனம் செலுத்து; ஏன் நடிக்க வேண்டும் .
இதனால் இப்போ பிரச்னைதானே வருகிறது’ என்று சொன்னார். ஆனால் ஜிவி பிரகாஷ் கேட்கவில்லையாம். ஜிவி நடிக்க வந்ததிலிருந்து சிறு சிறு விரிசல் ஜிவிக்கும் சைந்தவிக்கும் விழுந்தது.
பேசி பேசி காம்பரமைஸ் ஆகிக்கொண்டார்கள். ஒருகட்டத்தில் இந்தப் பிரச்னை பெரிதாக ஆரம்பித்தது. அதனையடுத்து பிரகாஷ் வீட்டுக்கே வருவதில்லை. அடிக்கடி வெளியிலேயே தங்க ஆரம்பித்தார். இதுவும் அந்த விரிசலை மேலும் பெரிதாக்கியது” என்றார்.