“துண்டு துண்டாக கிடைத்த ஐயப்பன் சிலை” குருசாமி செய்த செயல்..! கண்கலங்கிய போலீசார்..!!
துண்டு துண்டாக கிடைத்த ஐயப்பன் சிலை கதறி அழுத ஐயப்ப குருசாமி மாலை அணிவித்து காலில் விழுந்து மரியாதை செலுத்திய நெகிழ்ச்சி சம்பவம்.
திருவாரூர் அடுத்த திருமஞ்சனம் பகுதியில் புகழ்பெற்ற பறவை நாச்சியார் திருக்கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் குருக்களாக ஐயப்ப குருசாமி தம்புடு என்கிற முருகேசன் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே வைக்கப்பட்டிருந்த பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஒன்றரை அடி உயரமுள்ள வெண்கலத்திலான ஐயப்பன் சிலை திருடப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு கோவில் குருசாமி முருகேசன் தகவல் கொடுத்துள்ளார்..
தகவலின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர்., வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். கோவிலில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் சிலையை இரண்டு பேர் கடத்தி செல்வது தெரியவந்தது..
அதன் படி சிலை கடத்தலில் ஈடுபட்டு வந்த புலிவலம் காந்தி நகரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (30) மற்றும் மன்னார்குடி அருகே தட்டாங்கோவில் கிராமத்தைச் சேர்ந்த கோபு என்பவரை பிடித்து விசாரணை செய்ததில், ஐம்பொன் சிலை என நினைத்து ஐயப்பன் சிலையை திருடியதாக கூறியுள்ளார்கள் அந்த திருடர்கள். அதோடு சுவாமி சிலையை பல துண்டுகளாக வெட்டி சோதனையும் செய்துள்ளனர் அப்போதே அந்த சிலை ஐம்பொன் சிலை இல்லை என தெரியவந்துள்ளது. அதோடு சிலையை துண்டு துண்டாக வெட்டி பல்வேறு பகுதிகளில் வீசியுள்ளனர்.
அதன் பின் சிலை கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேரையும் அவர்களுக்கு வெளியில் இருந்து உதவிய திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்த மற்றொருவரையும், தூத்துக்குடியை சேர்ந்த ஒருவரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்., மேலும் இந்த சிலை கடத்தல் கும்பலுடன் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பது பற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் பின் திருடப்பட்ட சிலையானது மீட்கப்பட்டதாக காவலர்கள் சொன்ன தகவலின் படி குருசாமி அதனை பெற்று செல்ல வந்த போது சிலை துண்டு துண்டாக கிடந்ததை கண்டு மனமுடைந்து கதறி அழுதுள்ளார்., அவரை காவல்துறையினர் சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர். தொடர்ந்து மீட்கப்பட்ட ஐயப்பன் சிலைக்கு மாலை அணிவித்து சாஷ்டாங்கமாக காலில் விழுந்து குருசாமி முருகேசன் மரியாதை செய்தார்..
பல ஆண்டுகளாக சுவாமி சிலையை பூஜித்து வந்த ஐயப்ப குருசாமி சிலை பல துண்டுகளாக அறுக்கப்பட்டதை கண்டு குருசாமி கதறி அழுதது காவலர்களையும் கண் கலங்க செய்துள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..