புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்ட மாதிரி..! இன்னைக்கு எடப்பாடி ஐயா கதை ஆயிடுச்சு..!! கொந்தளிக்கும் கோவை மக்கள்..!!
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக #கோவை_மன்னிக்காது என்ற டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது..
கடந்த 3௦ ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டுமென தமிழ்நாடு சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை எழுப்பினார்.. இதுகுறித்து பேச தொடங்கிய எடப்பாடி பழனிசாமி பலரின் கவனத்தையும் ஈர்க்க தொடங்கினார்..
இந்திய அரசியலமைப்பு சட்டம் 161-வது பிரிவின் கீழ் தண்டனையில் இருக்கும் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க விதி இருக்கிறது ஆனால் அவர்களுக்கு சலுகை வழங்கபடாமல் அவர்கள் சிறையிலேயே அடைக்கபட்டு இருக்கின்றனர்.. 35 இஸ்லாமியர்களுக்கு ஆயுள்தண்டனை கைதிகள் இப்படி சிறையிலேயே காலம் கழித்து கொண்டு வருவது சரியா என அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தனர்..
அவர்களுக்கு நீண்ட விடுப்பு பரோலும் கொடுக்கப்படவில்லை.., 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி கோவையில் நடைபெற்றே குண்டு வெடிப்பில் கிட்டத்தட்ட 19 இடங்களில் குண்டு வெடிப்பு ஏற்பட்டு எராளமான உயிர் இழப்பு ஏற்பட்டது..
பெண்கள் குழந்தைகள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் கை, கால் இழந்துள்ளனர்.. இந்த நிலையில் இவர்களை விடுதலை செய்ய வேண்டும்.. பாஜகவின் கூட்டணியை முறியடித்து விட்டு.. இஸ்லாமிர்களை கவர எடப்பாடி முயன்று வருகிறார்..
திமுகாவின் முக்கிய வாக்கு வங்கியே இஸ்லாமியர்களின் வாக்கு தான்.., அந்த பல்லை பிடுங்கியே ஆக வேண்டும் அதற்காக எடப்பாடி பல வேலைகளை செய்து வருவதாக சொல்லபடுகிறது..
கோவை மக்களின் கொந்தளிப்பு :
இஸ்லாமிய மக்களை கவருவதாக நினைத்து எடப்பாடி பழனிசாமி தனக்கு தானே சூடு போட்டு கொண்டுள்ளார்.. அவர் வைத்துள்ள கோரிக்கைகள் பற்றி பேச தொடங்கியதும் கோவை மக்கள் பலர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரும்பியுள்ளனர்.. எல்லாருமே ஓட்டுக்காக தீவிரவாதிகளை விடுதலை செய்யனும்னு போராடுறாங்க இதை கோவை_மன்னிக்காது என்ற ஹாஸ் டாக் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.. யார் இஸ்லாமியர்களை சிறைக்கு அனுப்பினாரோ அவருக்கு தான் “எடப்பாடி ஜால்ரா” அடிக்கிறார்.. இவரு யாரு என்னனு எங்களுக்கு தெரியும்.. என நெட்டிசைன்கள் கலாய்த்து வருகின்றனர்..
Discussion about this post