பரிதாபங்கள் சேனலுக்கு வந்த பரிதாபம்…!! பரிதாபங்கள் கொடுத்த விளக்கம்..!!
பரிதாபங்களில் சேனலில் “லட்டு பாவங்கள்” குறித்து அப்லோடு செய்த வீடியோவின் சில காட்சிகள் டெலிட் செய்ததற்கான காரணம் குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.,
தற்போது நாடு முழுவதும் பரபரப்பாக பேசபட்டு வரும் ஒரு விஷயம்., திருப்பதி லட்டுவில் விலங்குகள் எண்ணெய் கலக்கப்பட்டிருப்பது குறித்து பல்வேறு சர்ச்சைக்கள் எழுந்தது.. புனித திருத்தலங்களில் ஒன்றாக கருதப்படும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் லட்டுவில் உபயோகப்படுத்தபடும் நெய்யில்., மாட்டு கொழுப்பு., பன்றி கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் கலந்த நெய்யை உபயோகபடுத்தி இருப்பதாக பெரும் சர்ச்சை கிளம்பியது..
இந்த கலப்படம் ஆனது… ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் நடத்தப்பட்டதாக தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டிருப்பதை உறுதி செய்வதற்காக குஜராத்தில் உள்ள தேசிய பால்வள மேம்பாடு வாரியத்தின் கீழ் இயங்கும் ஆய்வகதிற்கு லட்டுவின் மாதிரி சாம்பிள்கள் கொண்டு செல்லப்பட்டு உறுதி செய்யப்பட்டது., ஆய்வின் முடிவில் மாட்டு கொழுப்பு., பன்றி கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் கலந்திருப்பது உறுதியானது.., அதன் பின் லட்டு தயாரிக்க நெய் அனுப்பிய திண்டுக்கல் நிறுவனத்தை திருப்பதி தேவஸ்தான போர்டு பிளாக் லிஸ்ட்டில் வைத்துள்ளது.
மறுபக்கம் விலங்கு கொழுப்புகள் பயன்படுத்தியதால்., தோஷங்கள் நீக்கி பரிகார பூஜை செய்வதற்காக வேலைகள் நடந்து கொண்டிருந்தாலும் இந்த சர்ச்சைகான ஒரு முடிவு இன்னும் கிடைக்கவில்லை என சொல்லலாம்
இந்த விவகாரம் வெளியானதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள்., மற்றும் யூடியுப் சேனல்கள் இதுகுறித்து வீடியோவாக வெளியிட்டனர்., அந்த வகையில் பிரபல யூடியுப் சேனல்களில் ஒன்றான “பரிதாபங்கள்” சேனல் வெளியிட்ட வீடியோவிற்கு மட்டும் சர்ச்சை எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது..
அதாவது “லட்டு பாவங்கள்” என்ற ஒரு வீடியோவை தங்களுடைய வழக்கமான காமெடி பாணியில் நையாண்டி செய்து அவர்களது யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளனர். இணையத்தில் பதிவிடப்பட்ட சில மணி நேரத்திலயே அந்த வீடியோவானது பல லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது.
வீடியோ பதிவான இரண்டு மணி நேரத்திலயே சில காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது அதாவது பிராமிணர்களை கலாய்த்தும்., பிரசாதம் குறித்து இப்படி வீடியோ பதிவிடலாமா என பலரும் கேள்வி எழுப்பி., சிலர் கண்டனங்களை தெரிவித்ததை தொடர்ந்து குறிப்பிட்ட சில காட்சிகளை நீக்கியுள்ளது., மேலும் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து தனது இன்ஸ்கிராம் பக்கத்தில் பரிதாபங்கள் சேனல் விளக்கம் அளித்துள்ளது.
அதில் அவர்கள் குறிபிட்டிருப்பதாவது “கடைசியாக பரிதாபங்கள் சேனலில் வெளிவந்த வீடியோ முழுக்க நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்டது. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படவில்லை அதையும் மீறி சிலர் மனம் புண்பட்டிருப்பதால் அதற்கு வருத்தம் தெரிவித்து சம்பந்தப்பட்ட காணொலியை நீக்கி உள்ளோம் இது போல் வருங்காலங்களில் நடைபெறாது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பதிவை பரிதபாங்கள் பதிவிட்டதை தொடர்ந்து.., “நம்ப குடும்பத்துக்கு இது எல்லாம் தேவையா கோபி” என பலரும் கமெண்ட் செய்தும் மீம்ஸ் கிரியேட் செய்தும் வருகின்றனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..