ரசிகர்களுக்கு 5000 ஹெல்மேட் வழங்கிய நடிகர் பிரசாந்த்… காரணம் குறித்து பேசிய இயக்குநர் தியாகராஜன்..!
பிரசாந்த்:
90களின் காலக்கட்டத்தில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகர் பிரசாந்த். புகழின் உச்சியில் இருந்த சாக்லெட் பாய் பிரசாந்த் பின்னர் சினிமாவை விட்டு விலகியிருந்தார். தற்போது விஜயின் கோட் திரைப்படத்தின் மூலம் ரீ என்ரி கொடுத்த இவர் தனது தந்தையும் இயக்குநருமான தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் அந்தகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் பிரியா ஆனந்த், சிம்ரன், கார்த்திக், கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ஊர்வசி என பல நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ரிலிஸ்க்கு தயாரான இப்படம் வரும் ஆகஸ்ட் 9 தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்தநிலையில் புரோமோட் செய்யும் பணியில் தற்போது நடிகர் பிரசாந்த் மற்றும் படக்குழுவினர் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு நடிகர் பிரசாந்த் மற்றும் நடிகை பிரியா ஆனந்த் ஆகியோர் பேட்டியளித்தனர். அப்போது பிரசாந்த் பேட்டியின் ஒருபகுதியாக பெண் தொகுப்பாளினியுடன் தி நகரில் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் ரைட் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதன் விளைவாக, போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் அணியாமல் வந்ததால் நடிகர் பிரசாந்த்க்கு 2000ரூபாய் அபராதம் விதித்தனர். இந்த சம்பவம் பேசும் பொருளாக மாறிவந்த நிலையில் இயக்குநரும் பிரசாந்தின் தந்தையுமான தியாகராஜன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
தியாகராஜன் பேட்டி:
பிரசாந்த் அவர்களின் தீவிர ரசிகர் ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்தார். இதனை அறிந்த நடிகர் பிரசாந்த மன வேதனையில் இருந்ததாகவும் அதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் சென்று ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 5000 ஹெல்மெட்களை இலவசமாக வழங்கியுள்ளதாக அந்தகன் பட நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
-பவானி கார்த்திக்