ADVERTISEMENT
சூர்யவம்சத்தில் தேவையானி கலக்டெர் ஆனாங்களோ அதுபோல் ராதிகா எம்பி ஆகனுமாம்…
ராதிகா சரத்குமார் விருதுநகர் லோக்சபா தொகுதியில் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் போட்டியிடும் அவர் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையில் திருப்பரங்குன்றத்திற்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த ராதிகா மற்றும் சரத்குமாரை பாஜகவினர் வரவேற்றனர். இதையடுத்து சுவாமி தரிசனம் செய்த பின் சரத்குமாரும் ராதிகாவும் வெளியே வந்தனர். அப்போது ராதிகா பேட்டியில் முதலில் விருதுநகரில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித்தருவேன். உணவு மற்றும் இருக்கிற இடம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்திதான் நாங்கள் செயல்படுவோம்.
பிரதமர் மோடி நிறைய விஷயங்களை நாட்டுக்கு செய்திருக்கிறார், அவற்றில் பல விஷயங்கள் தமிழ்நாட்டிற்கு வந்து சேரவில்லை. அந்த வலையில் அத்திட்டங்களை செயல்படுத்த நாங்கள் கண்டிப்பாக பாடுபடுவோம் என்றார் ராதிகா. அப்போது “சரத்குமாரிடம் நீங்கள் போட்டியிடாமல் ராதிகா போட்டியிடுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்” என செய்தியாளர் கேட்டார்.
அதற்கு சரத்குமார் கூறுகையில், நான் போட்டியிட்டாலும் என் மனைவி போட்டியிட்டாலும் ஒன்றுதான். ராதிகா போட்டியிடுவது, நான் போட்டியிடுவது போல்தான். மக்களுக்கு கொடுத்த வாய்ப்பாகவே நான் கருதுகிறேன். நல்ல ஒரு பிரதிநிதி விருதுநகர் தொகுதிக்கு வர வேண்டும். அதிலும் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு இருக்கும் இந்நிலையில் நாமும் மகளிருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
ஏனென்றால் ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கிறார் என்று கூறுகிறார்கள். சூர்யவம்சம் படத்தில் எப்படி நான் படிக்காமல் தேவயானியை கலெக்டர் ஆக்கி மகிழ்ந்தேனோ அதைபோல் ராதிகாவை வெற்றி பெற வைக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. எனவே உண்மையாக மக்களுக்காக உழைப்போம்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.