14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் கேரளா போறாராம்ப்பா..!! எதற்குனு பார்க்கலாமா..?
கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, மோகன் ஆகிய நட்சத்திரங்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.
த்ரிஷாவும் ஒரு பாட்டிற்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.
கேரளா திருவனந்தபுரத்தில் ஸ்போர்ட்ஸ் ஹப் கிரிக்கெட் மைதானத்தில் படத்தினுடைய சூட்டிங் நடக்கவுள்ள நிலையில், அங்கே விஜய்யின் போஸ்டர்களை வைத்து தங்களது உற்சாகத்தை கேரள ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
கேரள சாலைகளிலும் விஜய் போலவே பைக் ஊர்வலங்களை மேற்க்கொண்டு வருகின்றனர். 14 ஆண்டுகள் கழித்து விஜய் படத்தின் சூட்டிங்கிற்காக கேரளா செல்கிறாராம்.