ADVERTISEMENT
புதுச்சேரியில் சோதனைச்சாவடிகள் அமைப்பு..! மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!!
புதுச்சேரி தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து அனைத்து சோதனைச்சாவடிகளிலும் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் ஆய்வு மேற்கொண்டார்.
பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் விதிமுறைகள் அமலுக்கு வந்தது.
தமிழகத்தோடு சேர்ந்து புதுச்சேரியிலும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறுவதால், இந்த தேர்தலை முறையாகவும், அமைதியாகவும் நடத்த புதுச்சேரி மாநில தேர்தல் துறை பல்வேறு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது.
குறிப்பாக புதுச்சேரியில் இருந்து மதுகடத்தல், தமிழகத்தில் இருந்து கணக்கில் வராத பணம், பொருட்களை தடுக்கும் விதமாக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டும், பறக்கும்படையின் 24 மணி நேர கட்டுப்பாட்டில் தீவிர வாகன சோதனை செய்யப்பட்டு வருகின்றது. இதன் மூலம் எல்லைகளை தேர்தல் துறையின் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
அந்தவகையில் புதுச்சேரி கடலூர் எல்லைப்பகுதியான தவளக்குப்பம், முள்ளோடை மற்றும் சோரியாங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு எல்லைப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளை புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான குலோத்துங்கன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், சோதனைச் சாவடி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து உரிய அறிவுரைகளையும் வழங்கினார்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.