இயக்குநர் தனுஷ் இயக்கவுள்ள அடுத்த படம் பற்றி தெரியுமா..?
தமிழ் சினிமாவில் இருக்கக்கூடிய திரைக்கலைஞர்களின் முன்னிலையில் தனுஷ் என்பவர் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டு சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பவர். தனுஷ் என்பவர் நடிகராகவும், பாடலாசிரியராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் இயங்கி வெற்றிகள் பல படைத்து வந்துள்ளார்.
தனுஷ் அவர்கள் இதுவரை 50 படங்களில் நடித்துள்ளார். இதில் தனுஷ் 50 படத்தை அவரே நடித்தும் இயக்கியும் “ராயன்” என்ற படம் வெளியாகி வசூரில் பட்டையை கிளப்பியது.
ராயன் படத்தின் வெற்றிக்கு படத்தின் தயாரிப்பாளரான கலாநிதி மாறன் அவர்கள் தனுஷை நேரில் அழைத்து இரண்டு காசோலையை கையில் கொடுத்து ஒன்று நடிகர் தனுஷ்க்கு என்றும் மற்றொன்று இயக்குநர் தனுஷ்க்கு என்றும் சொல்லி ஒப்படைத்தார்.
தனுஷ் ஒரு நல்ல நடிகர் என்பதை விருதுகள் வாங்கி நிரூபித்து இருந்தாலும் அவர் தற்போது நல்ல இயக்குநரும் கூட என்பதை அவர் இயக்கிய இரண்டு படங்களின் வாயிலாக பார்க்கலாம். அடுத்து தனுஷின் இயக்கத்தில் மூன்றாவதாக வெளிவரும் படமானதும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படம் இன்னும் திரைக்கு வெளிவரும் தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு கொண்டிருக்கிறார்கள்.
அடுத்ததாக தனுஷ் இயக்கவுள்ள நான்காவது படமாக நித்யா மேனன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஒரு பெண் இட்லி கடை வைத்து தனது குடும்பத்தை நடத்துவதை மையப்படுத்தி தயாராக உள்ளது எனவும் மேலும் தனுஷ் இதில் நடிக்கவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
எனவே இப்படத்தின் பெயரானது இட்லி கடை என வைக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் பல விருதுகளை குவிக்கும் எனவும் திரைப்பட வட்டாரம் தெரிவிக்கிறது.