ரவி அதை யோசிக்கவேயில்லை மனம் திறந்த ஆர்த்தி..!!
நடிகர் ஜெயம் ரவி அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு தனது மனைவியான ஆர்த்தியை பிரிவதாக சமூக வலைத்தளங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஜெயம் ரவி அவர்கள் நீதிமன்றத்திலும் விவாகரத்திற்கு அப்ளை செய்து உள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆனால் இந்த செய்தியை குறித்து அவரது மனைவி ஆர்த்தி எந்த பதிலும் தெரிவிக்காத நிலையில் தற்போது ஆர்த்தி அவர்கள் வெளியிட்ட விளக்கத்தை வைத்து ஜெயம் ரவி ரசிகர்கள் சமூக தளங்களில் சரமாரியாக கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
ஆர்த்தி அவர்களின் விளக்கத்தில், சில காலமாக சமூக தளங்களில் எங்களை பற்றியும் எங்களுடைய திருமண வாழ்வை பற்றியும் வரும் செய்திகளை கண்டு மன வேதனை அடைவதாகவும். இது அனைத்தும் என் பார்வைக்கு எட்டாமலும் என் ஒப்புதல் பெறாமலும் வந்த செய்தி எனவும், இதனால் 18 வருடங்களாக நான் வாழ்ந்த என் குடும்ப வாழ்க்கையின் கௌரவம் இழந்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சமீப காலமாக என் கணவரை பார்த்து மனம் விட்டு பேச நான் எவ்வளவோ முயற்சித்தும் எனக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது. நான் என் இரு குழந்தைகளும் எதுவும் அறியாமல் திகத்துப்போய் நிற்க்கின்றோம். திருமண உறவில் இருந்து விலக வேண்டும் என்ற முடிவு அவராக சொந்தமாக எடுத்ததே தவிர எங்களின் குடும்பத்திற்காக எடுக்கப்பட்டது அல்ல.
ஆனால் நான் இதை பற்றிய எங்களின் கருத்துகளை சமூக தளங்களில் தெரிவிக்க விரும்பாத நிலையில் தான் இருந்தேன் ஆனால் இப்போது என் நடத்தையை பற்றிய தவறான தாக்குதல்களை நான் எதிர்கொள்ள விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.