போராட்டத்தில் ஆசிரியர்கள்..!! ஆசிரியர்களாக மாறிய மாணவர்கள்..!!
தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) சார்பில், மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது., அப்போது “இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை சரி செய்து, மத்திய அரசு கொடுக்கும் ஊதியத்தை வழங்க வேண்டும் எனவும் ., கடந்த 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் தற்போது வரை வழங்க வேண்டிய ஒப்படைப்பு விடுப்பு பணம் உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்..
ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததால் பள்ளிகள் மூடப்பட்டு, மாணவர்கள் பள்ளி வராண்டாவில் உட்காரக்கூடிய நிலை ஏற்பட்டது. ஒரு நாள் நடைபெற்ற ஆசிரியர்களின் போராட்டத்தால் சுமார் 70 சதவீத ஆசிரியர்கள் பள்ளிகளின் பணிக்கு செல்லாமல், பல பள்ளிகளில் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..
இப்படி பட்ட சூழலில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று ஒரே நாளில் 8 ஆசிரியர்கள் பள்ளிக்கு வராமால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு படிக்கும் 250க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்ட நிலையில் அப்பள்ளியில் படிக்கும் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் வரை ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்கள் பாடம் எடுத்து பிற மாணவர்களுக்கு சொல்லி கொடுத்துள்ளனர்.. இது மற்ற மாணவர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..