ரூ.500 க்கு சிலிண்டர் வழங்கப்படும் என அசத்தலான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் அனைத்தும் வாக்குவங்கியை தக்க வைக்க பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வழங்கி வருகின்றன. அந்த வகையில் சாகர் என்ற இடத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கலந்து கொண்டார்.
அவர் “ மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கியாஸ் சிலிண்டர் விலை ரூ500க்கு வழங்கப்படும். அத்துடன் அனைத்து விவசாயக் கடன்களும் ரத்து செய்யப்படும். குடும்பத் தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ1500 வழங்கப்படும். முதல் 100 யூனிட்களுக்கு இலவச மின்சாரம். மாநிலத்தில் சமூக நீதியை நிலைநாட்ட சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்’’ என வாக்குறுதிகளை அள்ளி வழங்கியுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் ஏற்கனவே ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மத்தியப் பிரதேசத்தில் ஆளுங்கட்சியாக தற்போது பாஜக இருந்து வரும் நிலையில், எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் இம்முறை ஆட்சியை பிடிக்க அதிக முனைப்பு காட்டி வருகிறது.
Discussion about this post