தேறவே தேறாது..! வாக்கு மையத்தை விட்டு வெளியேறிய நயினார் நாகேந்திரன்..!
மக்கள் என்ன தீர்ப்பு அளிக்கிறார்களோ நான் அதை ஏற்க தயாராக இருக்கிறேன் என செய்தியாளர்களிடம் உருக்கமாக சொன்ன நயினார் நாகேந்திரன் தற்போது அந்தர் பல்டி அடித்து விட்டார்.
நெல்லை லோக்சபா தொகுதிகாளான 6 சட்டசபை தொகுதிகளில்
பாளையங்கோட்டை – அப்துல் வஹாப் திமுக
ராதாபுரம் – சபாநாயகர் அப்பாவு திமுக,
நாங்குநேரி – ரூபி மனோகரன் காங்கிரஸ்
ஆலங்குளம் – ஓபிஎஸ் அணியின் மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ,
அம்பாசமுத்திரம் – இசக்கி சுப்பையா அதிமுக
நெல்லையில் – நயினார் நாகேந்திரன் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை முதல் தற்போது வரை வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. சில நிமிடங்களில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் முன்னிலை வகித்து வந்தநிலையில்.
அதன் பின் ராபர்ட் புரூஸ் 2,10,629 வாக்குகள் பெற்று முன்னியிலையில் உள்ளார்.
நயினார் நாகேந்திரன் 1,44,968 வாக்குகள் பெற்று பின்தங்கியுள்ளார். இருவருக்குமான வாக்கு வித்தியாசம் என்பது 65,661 வாக்குகள் ஆனாலும். 6 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் எப்படியும் வெற்றிக் கிடைக்காது என நினைத்த நயினார் நாகேந்திரன் வாக்கு எண்ணும் மையத்திலிருந்து வெளியேறினார். அப்போது அவர் கூறுகையில் மக்கள் தீர்ப்பை நான் ஏற்று கொள்கிறேன்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..